ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தளவாய் கரையோரப்பிரதேச காட்டுப்பகுதி நீரோடையொன்றில் காணப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் வியாழக்கிழமை மாலை 04.01.2018 மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் 50 வயது மதிக்கத்தக்க இச்சடலம் இன்னும் அடையாளங்ககாணப்படவில்லையென பொலிஸார் கூறினர்.
மனித சஞ்சாரமற்ற பகுதியிலுள்ள புதர்கள் அடர்ந்த நீரோடையொன்றில் இச்சடலம் துர்வாடை வீசிய நிலையில் சிதைவடைந்து காணப்பட்டது.
இது கொலையா அல்லது நீரோடையில் தவறிவிழுந்ததனால் ஏற்பட்ட உயிரிழப்பா? என்பதை ஊகிக்க முடியாதுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment