13 Jan 2018

மட்டக்களப்பு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பிராந்திய அலுவலகம் இடமாற்றம்

SHARE
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்புப் பிராந்திய அலுவலகம் வியாழக்கிழமை 11.01.2018 தொடக்கம் மட்டக்களப்பு நகரப் பகுதிக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக அதன் இணைப்பாளர் ஏ.சி.அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடி வரும் மக்களின் போக்கு வரத்து உள்ளிட்ட வசதிகளின் நன்மை கருதி மட்டக்களப்பின் மையப் பகுதியான நகர மத்தியில் இந்த அலுவலகத்தை மாற்றும் முடிவை மேற்கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதுவரை காலமும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்புப் பிராந்திய அலுவலகம் மட்டக்களப்பின் புறநகர்ப் பகுதியான சின்ன உப்போடையில் இருந்து இயங்கி வந்தது.

தற்போது இந்த அலுவலகம் மட்டக்களப்பு கோவிந்தன் வீதியை அண்டிய இலக்கம் 46 இல் அமைந்துள்ள கட்டிடத்தில் இயங்கத் துவங்கியுள்ளது.

மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையத்திற்கு சமீபமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, சிறைச்சாலை, தலைமையக வங்கிகள், பாடசாலைகள் உள்ள பகுதிக்கான போக்கு வரத்து கோவிந்தன் வீதிக்கூடாகவே இடம்பெறுவது இங்கு குறிப்பிடத்தக்கது.



SHARE

Author: verified_user

0 Comments: