மட்டக்களப்பு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் மற்றும் குறைபாட்கள் தொடர்பில் ஊடகங்களின் பங்களிப்பு எவ்வாறு உள்ளது என்பது பற்றிய கலந்துரையாடல் கிரிஸ்டோபல் ப்லயின்டன் மிஸன் சர்வதேச அமைப்பின் அனுசரணையுடன் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ அலுவலகத்தில் திங்கட்கிழமை (27) நடைபெற்றது.
இதன்போது மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ அமைப்பினர் மாற்றுத்திறனாளிகளுக்காக ஆற்றிவரும் சேவைகள் தொடர்பாக அந் நிறுவனத்தின் பிரதிநிதிகளால் விளக்கமளிக்கப்பட்டதுடன் எதிர்காலத்தில் மாற்றுத்திறனாளிகளின் மத்தியில் எவ்வாறான சேவைகளை வழங்கலாம் என்பது பற்றியும் ஊடகவியலாளர்கள் மத்தியில் கலந்துரையாடப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளின் கருத்துக்கள், தேவைகள் மற்றும் குறைபாடுகள் உள்ளிட்ட பிரச்சனைகள் போதியளவு வெளக்கொணரப்படுவதில்லை என மாற்றுத் திறனாளிகள் சார்ந்தோரால் கருத்துத் தொரிவித்துவரும் நிலையில் மேற்படி இக் கலந்துரையாடல் நடைபெற்றது.
இந் நிகழ்வில் வெளிக்கள பயணமாக மாற்றுத்திறனாளிகளை சந்தித்து கலந்துரையாடும்பொருட்டு வவுணதீவு பிரதேசத்திற்குச் சென்று அங்கு “வாழ்வகம்” விசேட தேவையுடையோர் அமைப்பினரை சந்தித்து அவர்களின் இன்றைய நிலை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில், அவர்கள் பல விடயங்கள் பற்றி ஊடகவியலாளர்கள் மற்றும் கிரிஸ்டோபல் ப்லயின்டன் மிஸன், வை.எம்.சி.ஏ அமைப்பினர்களிடம் தெரிவித்தனர்.
“தம்மை ஏற்றிவிட வேண்டாம் ஏணியைத் தாருங்கள் நாம் ஏறிக்கொள்வோம்” என்பதற்கிணங்க எங்களுக்கு உதவ முன்வாருங்கள் என்பதை அவர்கள் இதன்போது பிரதானமாக முன்வைத்தனர்.
0 Comments:
Post a Comment