தேர்தல் தொடர்பான சட்டதிட்டங்களை பெண் வேட்பாளர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் தெரிவித்தார்.
உள்ளுராட்சி மன்றங்களுக்காக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு புதிய தேர்தல் சட்டவிதிமுறைகளைப் பற்றித் தெளிவுபடுத்தும்; விளக்கக் கூட்டம் ஏறாவூரில் இடம்பெற்றபோது அதில் மேற்படி உள்ளுராட்சி மன்றங்களுக்காகப் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் எவரும் வருகை தராதது குறித்துச் சுட்டிக்காட்டியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக புதன்கிழமை 27.12.2017 மேலும் தெரிவித்த பொலிஸ் பொறுப்பதிகாரி சிந்தக பீரிஸ், உள்ளுராட்சி மன்றங்களுக்காக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆண் பெண் என்ற வேறுபாடில்லாமல் புதிய தேர்தல் தொடர்பான சட்டவிதிமுறைகளைப் பற்றித் தெளிவு பெற்றிருக்க வேண்டும்.
சட்டம் ஒழுங்கைக் கடைப்பிடித்து தேர்தலை சுமுகமாக எதிர்கொள்ளும் வகையில் பொலிஸார் புதிய தேர்தல் தொடர்பான சட்டதிட்டங்களைப் பற்றி வேட்பாளர்களுக்கும் வாக்காளர்களுக்கும் விழிப்புணர்வூட்டி வருகின்றனர்.
எனவே, இந்த விழிப்புணர்வுகளில் உள்ளுராட்சி மன்றங்களில் 25 வீதம் பெண்களுக்கு இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்ற சட்ட ஏற்பாடுகளுடன் இருக்கும் நிலையில் பெண் வேட்பாளர்கள் தேர்தல் தொடர்பான விளக்கங்களில் அக்கறையுடன் கலந்து கொள்ள வேண்டும்.
நாட்டின் சட்டதிட்டங்களபை; பற்றித் தனக்குத் தெரியாது என்று எந்தவொரு பிரஜையும் கூற முடியாது.
இதன் காரணமாக உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் சகல கட்சிகளையும் சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்த பெண் வேட்பாளர்களுக்கு தேர்தல் சட்ட ஏற்பாடுகள் குறித்து தனியானதொரு தெளிவுபடுத்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் தவறாது பெண் அபேட்சகர்கள் தவறாது கலந்து கொண்டு நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் கடைப்பிடிக்கும் தமது சிறந்த முன்மாதிரியை வெளிப்படுத்த வேண்டும்.”என்றார்.
0 Comments:
Post a Comment