2 Dec 2017

வாசிப்பை ஊக்குவிக்கும் செயற்றிட்டத்தினூடாக நீண்ட காலத்தில் எமது சமூகத்மை மேன்மை தங்கிய சமூக மாக மாற்றலாம்.

SHARE
வாசிப்பை ஊக்குவிக்கும் செயற்றிட்டத்தினூடாக நீண்ட காலத்தில் எமது சமூகத்தை மேன்மை தங்கிய சமூகமாக மாற்றலாம். என தேசியக் கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மனித வள அபிவிருத்திச் 

சபையின் உதவிப்பணிப்பாளரும் எழுத்தாளருமான சிவகுரு தணிகசீலன் தெரிவித்தார்.

மட்.செட்டிப்ளையம் பொதுநூலக்தின் பரிசழிப்பு விழா வெள்ளிக்கிழமை (01) 
மட்.செட்டிபாளையம் மகாவித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

நூலகர் திருமதி.சசிதரன் வளர்மதியின் ஒழுங்கமைப்பில், வாசகர் வட்டத் தலைவரும் அதிபருமான ரி.அருள்ராஜரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புணர்வாழ்வழிப்பு மீழ்குடியேற்ற மற்றும் இந்துமத  அலுவல்கள்  அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ்.பாஸ்கரன், தேசியக் கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மனித வள அபிவிருத்திச் சபையின் உதவிப்பணிப்பாளரும் எழுத்தாளருமான சி.தணிகசீலன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சிறுவர் மேம்பாட்டு உத்தியோகஸ்தர் எம்.புவிதரன்  உள்ளிட்ட மாணவர்கள், வாசகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது தணிகசீலன் மேலும் தெரிவிக்கையில்…..

கண்டவற்றைக் கற்கவேண்டும், அன்னத்தைப்போன்று தீயதை விடுத்து நல்லவற்றை எடுத்துக் கொள்வது போன்று கல்வியில் படிப்பினைகளையும், வாசிப்பினையும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். வாசிப்புச் செயற்பாடுகள் என்பது மாணவர்கள் மாத்திரமின்றி சமூகத்திலும் ஒரு விழிப்புணர்வுகளை ஏற்படுத்திக் கொண்டு வருகின்றன.

பாடசாலைகளிலும் இவ்வாறான வாசிப்புச் செயற்றிட்டங்களை ஏற்படுத்துவதனூடாக நீண்ட காலத்தில் எமது சமூகத்மை மேன்மை தங்கிய சமூகமாக மாற்றலாம். குறிப்பாக வர்த்தகம் செய்கின்றவர்கள் வாசிக்கின்ற அளவிற்குக்கூட படிக்கின்ற நாங்கள் வாசிப்பதில்லை, உலகத்திலே அழகாகப் பேசக்கூடியவர்கள் தமிழர்கள் எனவும், எழுத்துத் துறையிலும் இந்தியாவில்தான் அதிகளவானோர் தேன்றிக் கொண்டிருக்கின்றார்கள் என தமிழக மக்கள் தெரிவிக்கின்றனர். அதனால்தான் ஒரு குறிப்பிட்ட வீதமானோர் நாசாவில் வேலை செய்பவர்கள் இந்தியர்கள் என சொல்லப்படுகின்றது.

படித்ததால் படித்ததெல்லம் படிகளாக அமைந்து உலத்தில் இருக்கின்ற நாசாவில்கூட நமது கிழக்குப் பிராந்தியத்திலிருந்தும் சிலர் அங்கும் கடமையாற்ற இடம் பிடித்துள்ளார்கள். அதற்குக் காரணம் அவர்களுடைய கல்வித்திறனும், அவர்களுடைய வாசிப்புத்திறனும்தான்.

மாணவர்கள் கல்வியில் மேன்மையுற வேண்டுமால் பாடம் சம்மந்தப்பட்ட விடையங்களைவிட நாளாந்த விடையங்கனைளயும் கற்றறிந்து கொள்ளவேண்டும். உலகமயமாக்கலை நாம் உடனுக்குடன் அறிந்து கொள்ளவேண்டுமாயின் வாசிப்புத்திறைனை வளர்த்துக்  கொள்ள வேண்டும். பாடசாலை மாணவர்கள் தொடக்கம் பல்கலைக் கழக மாணவர்கள் வரைக்கும் ஆழமாக வாசித்தால் எதிர்காலத்தில் நாம் பலவற்றைச் சாத்திக்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
























SHARE

Author: verified_user

0 Comments: