12 Dec 2017

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் பாராட்டுவிழா.

SHARE
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் இவ்வருடம் நடைபெற்ற புலமைப்பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்குமேல்  சித்தியடைந்த மாணவர்களையும்,டிநூற்றுக்கு மேல் புள்ளிகளை எடுத்த மாணவர்களையும் பாராட்டி கௌரவிக்கும் விழா புதன்கிழமை மெதடிஸ்த மத்திய கல்லூரியின் முதல்வர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் கே.அருள்பிரகாசாம் பிரதம அதிதியாகவும், மற்றும் பிரதி அதிபர்களான இ.பாஸ்கர்,கே.சசிகாந் உப அதிபர்களான எஸ்.லோகராசா, எஸ்.சதீஸ்வரன், பகுதித்தலைவர் திருமதி. வனஜா வாலநாயகம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டார்கள்.

இதன்போது 74 மாணவர்களுக்கு வெற்றிக்கேடயங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டு அதிதிகளால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள். 

இச்சாதனையாளர்களை உருவாக்கத்திற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஆசிரியத்தார்களான எஸ்.சிற்சபேசன், திருமதி.சந்திரிகா பஞ்சேந்திரன், திருமதி தர்சினி ஜெயந்திரன் ஆகியோர்களை கோட்டக்கல்விப் பணிப்பாளர் வாழ்த்தி பாராட்டியதுடன், பெற்றோர்களினால் இவர்களுக்கும், முதல்வர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் அவர்களுக்கும் விஷேட ஞாபகார்த்த சின்னம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள். 





SHARE

Author: verified_user

0 Comments: