6 Dec 2017

மட்டக்களப்பில் 24 மணி நேரமும் இயற்கும் அனர்த்த முன்னாயத்த செயலணி உருவாக்கம்

SHARE
வங்காள விரிடாவில் ஏற்பட்டுள்ள தாளமுக்கம் வடகிழக்குக்கு அப்பால் திருகோணமலையிலிருந்து 850 கிலோமீற்றர் தொலைவில் நிலை கொண்டிருப்பதாக அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதற்கு முன்னதாக மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகளங்கள், மற்றும் கிராம மட்டத்திலிருக்கின்ற அனர்த்த முகாமைத்துவக் குழுக்கள் அனைத்திற்கும் தெரிவித்து அனர்த்தத்திற்கு முன்னயாயத்தமாக இருக்குமாறு கூறியுள்ளோம் என மட்டக்களப்பு மவாட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கச்சோரியில் புதன் கிழமை (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…..

மேலும் வெள்ளநீர் வடிந்தோடும் முகமாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பிரதேச சபைகளுக்கும் அறிவுறுத்தல்கள் வளங்கப்பட்டுள்ளது. எமக்குக் கிடைத்துள்ள அறிவித்தலின்படி பொலிஸ், இராணுவம், கடற்படை பிரதேச செயலாளர்கள், முக்கிய நிறுவனங்களில் பிரதிநிதிகளை செவ்வாய்க்கிழமை அழைத்து உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. 

சூறாவெளியோ அல்லது சுனாமி அனர்த்தமோ ஏற்படுத்துவதற்குரிய வாய்ப்புக்கள் இல்லை. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்படக் கூடிய அனர்த்தத்தில் இருந்து, மக்களைப் பாதுகாக்கும் வகையில், அனைத்து அதிகாரிகளும் முப்படையினரும் தயார் நிலையில் இருப்பதாகவும் அச்சங்கொள்ளத் தேவையில்லை.

இதுவரையில் சுனாமி அனர்த்தமோ, சூறாவளி அனத்தமோ ஏற்படுவது தொடர்பான அறிவித்தல்கள் கிடைக்கப்பெறவில்லை. வங்காள விரிகுhடாவின் தென்கிழக்காக 850 கிலோமீற்றருக்கு அப்பால் தாளமுக்கம் உருவாகியிருக்கிறது. அது பலத்த காற்றாக மாறி வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது எங்களது கரையோரங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. குறிப்பாக கடல் தொழில்களில் தொழில்களில் ஈடுபடாமல் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கரையோங்களில் வசிப்பவர்களை அறிவூட்டுவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் பிரதேச செயலாளர்கள் ஊடாக கிராம உத்தியோகத்தர்களுக்கும் அறிவிக்கப்பட்டள்ளது.
ஏற்கனவே பிரதேச சபைகள், பிரதேச செயலாளர்களுக்கும் எந்த ஒரு அனர்த்தம் ஏற்பட்டாலும் அதற்கான நடிவடிக்கைகளில் ஈடுபடும் படி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மக்கள் இதுதொடர்பில் அனாவசியமாக அச்சங் கொள்ளத் தேவையில்லை. என்றும் அது தொடர்பான அறிவித்தல்கள் கிடைக்கும் பட்சத்தில் உரிய முறையில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்த அவர்.

இலங்கையை சூழவுள்ள கடல் பிராந்தியங்களில் முக்கியமாக வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம்; 80 தொடக்கம் 100 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

எனவே மீனவர் சமூகம் மற்றும் கடல்சார் தொழிலாளர்களின் கடல் நடவடிக்கை பாதுகாப்பற்றது எனவும் வாநிலை அவதான நிலைத்தின் அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்தம் ஒன்று இடம்பெற்றால் அதற்குரிய முன்னாயத்த நடவடிக்ககைகள் அனைத்தும் கச்சேரி மட்டத்திலிருந்து கிராம மட்டம் வரையில் அனர்த்த முன்னாயத்த குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.  இதற்காக வேண்டி மட்டக்களப்பு மாவட்ட ரீதியில் அனர்த்த முகாமைத்துவ செயலணி ஒன்றும் இன்றயத்தினம் இஸ்த்தாபிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு கச்சேரியில் 24 மணிநேரமும் அனர்த்த முகாமைத்துவ செயலணி செயற்படவுள்ளது. இச்செயலணி தரவுகள் பேணுதல், முன்னாயத்த நடவடிக்கைள், அனர்த்தத்தின்போது, அனர்த்தத்தின் பின்ன் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைள் தொடர்பாக செயற்படவுள்ளது.
அனர்த்தம் ஒன்று இடம்பெற்றால் மட்க்களப்பு மாவட்டத்தில் கரையோரத்தில் இருக்கின்ற 9 பிரதேச செயலகங்கள் பாதிப்புக்குள்ளாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் பொதுமக்கள் அனாவசியமான தகவல்களை நம்பவேண்டாம், நாம் எமது உத்தியோகஸ்த்தர்களுடாக தகவல்களை வழங்குவோம். என அவர் தெரிவித்தார்.




SHARE

Author: verified_user

0 Comments: