எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் உள்ளுராட்சி மன்றங்களைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்கான பிரச்சாரங்களினூடாக குடும்பங்களுக்குள்ளும் பிரதேசங்களுக்குள்ளும் பிளவுகளை ஏற்படுத்த முனைய வேண்டாம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளருமான யூ.எல்.எம்.என். முபீன் தெரிவித்தார்.
இது தொடர்பாக புதன்கிழமை 06.12.2017 கருத்து வெளியிட்ட அவர், காத்தான்குடி பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரஸ{க்கான ஆதரவுத்தளம் அதிகரித்த வண்ணமே உள்ளதால் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் காத்தான்குடி நகரசபையின் ஆட்சியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும்.
அதேவேளை, இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரங்களில் நாகரீகத்தைக் கடைப்பிடிப்பதும் குடும்பங்களிடையேயும் பிரதேசங்களுக்கிடையேயும் உள்ள ஒற்றுமையும் அமைதியும் சீர்குலையாமல் பாதுகாப்பதும் வேட்பாளர்களின் சமூகப் பொறுப்பாக இருக்க வேண்டும்.
ஒரு குடும்பத்திற்குள் பல கட்சிகளை ஆதரிப்பவர்கள் இருக்கலாம்.
ஆயினும், இந்த அரசியல் நடவடிக்கைகளுக்காக அமைதியான குடும்ப உறவுகளில் உரசல்கள், விரிசல்கள் ஏற்படுவதற்கு இடமளிக்கக் கூடாது.
மக்களை ஆளப்போகின்றவர்கள் ஆற்றலுள்ளவர்களாகவும் அமைதியை விரும்புபவர்களாகவும், நாகரீகமானவர்களாகவும் இருக்க வேண்டும் என மக்கள் கொண்டுள்ள எதிர்பார்ப்பை நாம் சிதறடித்து விடக் கூடாது.
அவ்வப்போது வரும் தேர்தலுக்காக ஆலாய்ப் பறந்து அமைதிக்குக் குந்தகம் விளைவித்து அழிவுகளையும் இழப்புக்களையும் மாறாத மன வடுக்களையும் ஏற்படுத்தி விடக் கூடாது.
உள்ளுராட்சி மன்றங்களைக் கைப்பற்றுவதற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட குடும்ப, சமூக, பிரதேச அமைதியைக் கைப்பற்றிக் கொள்வதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அதுவே காலத்தின் தேவையாகும்” என்றார்.
0 Comments:
Post a Comment