தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்கள் உறங்கும் இடங்களில் ஒன்றாகக் காணப்படுவது மட்டக்களப்பு மவாட்டம் கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்தில் அமைந்துள்ள மாவடிமுன்மாரி துயிலுமில்லமாகும்.
இத்துயிலுமில்லத்தில் 65 மாவீரர்களின் வித்துடல்கள் புதைக்கப்பட்டுள்ளன. இத்துயிலுமில்லத்தில் கார்த்திகை 27 ஆம் திகதி திங்கட் கிழமமை மாலை சரியாக 6.05 மணிக்கு ஈகைச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டன.
முன்னாள் போராளிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், பொதுமக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மாகாண பிரதித் தவிசாளர் இ.பிரசன்னா, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா, உள்ளிட்ட அரசியல் பிரதிநிகளும், ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களும், கொண்டிருந்தனர்.
இதன்போது முதலாவது ஈகைச் சுடரினை மாவீரர் ஒருவனின் தாயாரும், முன்னாள் போரளி ஒருவரும் ஏற்றி வைத்தனர்.
அங்கு அமையப்பெற்றுள்ள புதைகுழிகளுக்கு மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மாவீர்களின் உருவப் படங்களை வைத்து மலர்மாலை அணிவித்து கண்ணீர் மல்க ஈனைச் சுடரினை ஏற்றி வைத்தமை அனைவரின் மங்களை நெகிழச் செய்திருந்தது.
மாவீரர் புரட்சிப் பாடல் ஒலிகக்ச் செய்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உரையும் ஒலிபெருக்கியில் ஒலிக்கச் செய்த பின்னர் 3 ஒலிகள் எழுப்பப்பட்டு சரியாக 6.05 மணிக்கு மாவீரர்களுக்கு, ஈகைச் சுடர் ஏற்றப்பட்டன.
இதன்போது மாவீரர் நினைவு உரைகளும் இடம்பெற்தோடு மாவீரர்களின் பெற்றோருக்கு தென்னம் கன்றுகளும், ஏற்பாட்டுக் குழுவினால் வழங்கி வைக்கப்பட்டன.
யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் இத்துயிலுமில்லம் கவனிப்பாரற்ற நிலையில் பற்றைக்காடாக காட்சியழித்தது. பின்னர் அரசியல் பிரமுகர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்களால் துப்பரவு செய்யப்பட்டுள்ளது. யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் இத்துயிலுமில்லத்தில் வெளிப்படையாக மாவீரர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் ஒன்று திரண்டு துயிலுமில்லத்தை சிவப்பு மற்றும் மஞ்சள் நிறக் கொடிகளால் அலங்கரித்து, ஈகைச் சுடர் ஏற்றுவது இதுவே முதற்தடவையாகும் என்பதும் குறிப்பிட்டத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment