8 Nov 2017

மட்டக்களப்பில் பாரிசவாத தாக்குதல் பற்றிய செயற்பாட்டு விழிப்புணர்வுக் குழுஸ்தாபிப்பு

SHARE
மட்டக்களப்பை முன்னுதாரணமாகக் கொண்டு பாரிசவாத நோய்த் தாக்குதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக மட்டக்களப்பில் வைத்திய நிபுணர்கள் அடங்கிய விழிப்புணர்வுக் குழு ஸ்தாபிக்கப்பட்டிருப்பதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விஷேட நரம்பியல் வைத்திய நிபுணர் ரீ. திவாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு செயற்பாட்டுக் குழுவின் அங்கத்தவர்களாக தேசிய பாரிசவாத சங்கத்தின் தலைவர் நரம்;பியல் வைத்திய நிபுணர் எம்.ரி.எம். றிப்ஸி, அதன் செயலாளர் நரம்;பியல் வைத்திய நிபுணர் காமினி பத்திரண, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விஷேட நரம்பியல் வைத்திய நிபுணர் ரீ. திவாகரன், விஷேட நரம்பியல் வைத்திய அதிகாரி நவரெத்தினம் மௌலீசன் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

இந்த விடயம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை 07.11.2017 விவரம் தெரிவித்த விஷேட நரம்பியல் வைத்திய நிபுணர் திவாகரன், அடுத்தாண்டு பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி பாரிசவாத தாக்குதல் பற்றிய விழிப்புணர்வுப் பேரணியை மட்டக்களப்பில் நடாத்த தேசிய பாரிசவாத சங்கத்தின் தலைவர் நரம்;பியல் வைத்திய நிபுணர் எம்.ரி.எம். றிப்ஸி முன்வந்துள்ளார். அதனடிப்படையில் இந்த செயற்பாட்டுக் குழு தெரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

பாரிசவாத தாக்குதல் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் இன்னும் அதிகமாகத் தேவைப்படுகின்றது.

பாடசாலை மாணவர்களும் விழிப்புணர்வூட்டப்பட வேண்டியவர்களாக உள்ளார்கள். அதன் மூலமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் பாரிசவாதம் பற்றிய தகவல் சென்றடைய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

பாரிசவாதத்தை முறியடிப்பதில் வைத்தியசாலை நிருவாகத்துடன் சேர்ந்து ஒட்டு மொத்த சமூகமும் இந்த விடயத்தில் அக்கறை எடுக்க வேண்டும்.

உலகெங்கிலும் வாழும் மக்களில் ஆறு பேரில் ஒருவர் என்ற அடிப்படையில் 2 செக்கன்களுக்கு ஒருவர் பாரிசவாத தாக்குலுக்கு உள்ளாகிப் பாதிக்கப்படுகின்றனர். அத்தகைய பாதிப்புக்குள்ளானோரில் 3 சதவீதமானோரே மீளமுடிகின்றது.

கடந்த ஒரு வருட காலத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை அணுகிய பாரிசவாத தாக்குதலுக்கு உள்ளானோரில் 23 பேர் வெற்றிகரமான சிகிச்சை மூலம் ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளார்கள்.

அதேவேளை சுமார் 100 பேருக்கு மேல் பாரிசவாத தாக்குதலுக்கான வைத்திய ஆலோசனைகளையும் முறைப்படியான சிகிச்சைகளையும் பெற்றுள்ளார்கள்” என்றார்.




SHARE

Author: verified_user

0 Comments: