கடந்த கலங்களில் தமிழ் மக்கள் நாடு முழுவதும் பல பிரபலமான அரச உயர்பதவிகளில் கடமையாற்றியிருந்தார்கள்.
அது தற்காலத்தில் உண்மையாக இருக்க வேண்டும். கடந்த 1947 இற்கும் 1981 இற்கும் இடையில் நாடுபூராகவும், சிங்கள மக்களின் அதிகரிப்பு 238 வீதமாகும். அதேவேளையில் அக்காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் சிங்கள மக்களின் அதிகரிப்பு 888 வீதம், அம்பாறை, திருகோணமலை உள்ளிட்ட தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்றன. இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த தந்தை செல்வா அவர்கள் நாட்டில் பிராந்திய சுயாட்சி தேவை, சுயநிருணய உரிமை எமக்கு உரித்தாக வேண்டும், அவ்வாறு உருவாகினால்தான் சமஸ்ட்டி முறையில் இறைமை மதிக்கப்படும். அவர் தெரிவித்திருந்தார்.
புதிய அரசியல் அமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு மட்டக்களப்பு தாண்டவன்வெளி பேர்டினட் மண்டபத்தில் சனிக்கிழமை (25) மாலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது கலந்து கொண்டு விளக்கமளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதில் அவர் மேலும் தெரிவிக்கையில்
சமஸ்ட்டிமுறை கனடா, அவுஸ்ரோலியா, சுஸ்ச்சலாந் போன்ற நாடுகளில் இருந்து வருகின்றது. இருந்த போதிலும் சில நாடுகளில் இந்த சமஸ்ட்டி முறை முழுமையாக இடம்பெறாமலும் உள்ளன. சமஸ்டி முறை ஒரு நால்ல ஆட்சி முறை மத்தியில் கூட்டாட்சி, மாநிலங்களில் தனியாட்சி முறையாகும்.
1930 ஆம் ஆண்டு இந்த சாட்டில் டொனமுர் கொமிசன் வந்து. இந்த நாடு பன்மைத்துவ நாடு, இங்கு பல்வகைத்தன்மை மக்கள் வாழ்கின்றார்கள், கண்டி ஒரு அலகாகவும், அதுபோல் வடக்கு கிழக்கு ஒரு அலகாகவும் இருக்க வேண்டும் என தெரிவித்துச் சென்றிருந்தார்கள்.
வடக்கு கிழக்கு இணைப்புத் தொடர்பாக ஒரு முடிவு வரவேண்டும், வடக்கு கிழக்கு இணைப்பு என்பது அது நிரந்தரமாக, இறுதியாக இணைக்கப்பட வேண்டிய விடையம். துரதிஸ்டவசமாக ராயூகாந்தி இறந்தார். அவர் இறந்திருக்காவிட்டால் இந்த பிரச்சனை அன்றே தீர்க்கப்பட்டிருக்கும். அந்த வதய்ப்பை நாங்கள் இழந்து விட்டோம். சரித்திர ரீதியாக தமிழ் போசும் மக்கள் வடகிழக்கில் வாழ்ந்து வந்திருக்கின்றார்கள் என்ற ரீதியில்தான் வடகிழக்கு இணைக்கப்பட்டிருந்தது. மீண்டும் வடக்கு கிழக்கு இணைவதில் இவ்விடையத்தில் தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் ஒரு இணக்கப்பாடு வரவேண்டியது அத்தியாவசியமாகும். தமது எதிர்காலம் கருது தங்களுயைட பின் சந்ததிகள் சந்தோசமாக வாழவேண்டும் என்ற நோக்கத்தைக் கருத்தில் கொண்டு ஒரு இணக்கப்பாட்டிற்கு இரு சமூகமும் வரவேண்டும். இவ்விடையத்தில் ஒரு சாதகமான விடையத்தில் நாங்கள் வரவேண்டும்.
பேச்சுவார்த்தைகளின்போது விட்டுக்கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்க வேண்டும். மக்களுக்குப் பாதிப்பில்லாமல் இவ்விடையத்தை நாம் தீர்வுக்குக் கொண்டு வரவேண்டும்.
இலங்கையில் யாழ் மாவட்டத்தைத் தழுவி கூடுதலாக தமிழ் மக்கள் வாழும் மாவட்டம் மட்டக்களப்பு மவாட்டமாகும். இது நமக்கு ஒரு முக்கியமான மாவட்டமாகும் இந்த மாவட்டத்தில் 75 வீதமான தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள். இன்றய சூழலில் தமிழ் மக்கள் அனைவரும் ஒருமித்து ஒற்றுமையாக இருக்க வேண்டும். நாம் 1966 ஆம் ஆண்டு தொடக்கம் ஒருமித்து ஒற்றுமையாக நின்ற காரணத்தினால்தான் நாங்கள் இன்றைக்கு இந்த அந்தஸ்த்தை அடைந்திருக்கின்றோம்,. இந்த சந்தர்ப்பத்தை நாங்கள் இழக்கக்கூடாது, மீண்டும் ஒருமுறை இவ்வாறானதொரு சந்தர்ப்பம்வரும் என எதிர்பார்க்க முடியாது.
எமது பிரச்சனைககள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு ஆதரவு கிடைக்கும், அத்தோடு, சபையில் சர்வசன வாக்கெடுப்பு நடைபெற்றால் அதிலும் வெற்றி பெறுவோம்.
விரைவில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும். சிலவேளைகளில் தேர்தல் எதிர்வருகின்ற தை மாதத்தில் நடைபெறலாம். தேர்தல் முடிவுகளின்படி நாம் ஒருமித்து ஒற்றுமையாக நிற்கின்றோம் என்பதை இந்நாட்டிலுள்ள அனைவருக்கும், சர்வதேச சமூகத்திற்கும் சொல்ல வேண்டும். சர்வதேச சமூகத்தின் ஆதரவு எமக்கு பெரியளவு இருக்கின்றது. ஒருமித்த நாட்டுக்குள், எமது உள்ளகத் தீர்வு அடிப்படையில் நாம் ஒருதீர்வைக் காண்பதற்குத் தயாராக இருக்கின்றோம் என்பதை நிருபித்திருக்கின்றோம். அதற்கு சர்வதேச சமூகம் வரவேற்றுள்ளது. இதற்குப் பின்னால் எமது மக்கள் நிற்றவேண்டும் என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment