6 Nov 2017

அறிக்கைக்கு அப்பால் மாற்றத்திற்கான இலங்கை ஊடகவியல் பயிற்சி நெறி

SHARE
யுத்தம் மற்றும் சமாதானங்கள் தொடர்பில் அறிக்கையிடும் (Institute for War and Peace Reporting) நிறுனத்தின் அனுசரணையில் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட சிங்கள, தமிழ், ஆங்கில் மொழி ஊடகவியலாளர்களுக்கு  சர்வதேச தரத்திலான புலனாய்வு ஊடகத்துறை தொடர்பான மீளாய்வு பயிற்சிப் பட்டறை கொழும்பு வெள்ளவத்தை குளோபல் டவர் உல்லாச விடுதியில் வார இறுதி நாட்களில் (04,05- 11.2017) நடைபெற்றது.
இதன்போது இலங்கையின் நாலாபுறங்களிலுமிருந்து அறிக்கையிடலின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட முழு நேர சுதந்திர  ஊடகவியலாளர்கள் சுமார் 24 பேர் பங்குபற்றினர்.

இடப்பெயர் ஊடகம், ஊடக சந்திப்புக்களின் போது கவனத்திற்கொள்ள வேண்டிய விடயங்கள், செய்தி மூலங்களைப் பெறும் வழிமுறைகள், தகவல்களைப் பெறுதல், தகவல் ஊடகம், ஊடக ஒழுக்கநெறி, புலனாய்வு ஊடகத்தின்போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள். முழுமையான புலனாய்வு ஊடக அறிக்கை எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பில் பயிற்சிப்பட்டறை இடம்பெற்றது.

மேலும், அறிக்கையிடல்களுக்காக ஊக்குவிப்புத் தொகையும் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டது.

இதன்போது சிரேஷ்ட ஊடகவியலாளர்களும் பயிற்றுவிப்பாளர்களுமான சிஹார் அனிஸ், டில்ருக்ஸி ஹந்துன்நெத்தி, யுத்தம் மற்றும் சமாதனங்கள் தொடர்பில் அறிக்கையிடும் நிறுனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஏ. முஹம்மத் அஸாத்,  ஆகியோர் பயிற்சிகளை வழங்கினர்.

ஊடக தொழிற் சங்க சம்மேளனத்தின் தலைவர் கருணாரெத்ன கமகே, அதன் செயலாளர் லங்காபேலி தர்மசிறி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.











SHARE

Author: verified_user

0 Comments: