19 Nov 2017

துறைநீலாவணையில் மின்னல் தாக்கி இரண்டு பிள்ளையின் தாய் உயிரிழப்பு.

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணைக் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை (19) காலை 7.46 மணியளவில் மின்னல் தாக்கலினால் இரண்டு பிள்ளையின் தாய் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பற்றி தெரிய வருவதாவது. ஞாயிற்றுக் கிழமை இடி மின்னல் தாக்கத்துடன் துறைநீலாவணை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் இராசரெட்ணம் -கலைவாணி(வயது -36)எனும் இரண்டு பிள்ளையின் தாய் மின்னல் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த தாயின் மகன் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்துள்ளார் மின்னல் தாக்கம் தொலைக்காட்சி அன்ரனா கம்பியில் விழுந்து பாரிய சத்தம் கேட்டதுடன் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த மகனைத் தாக்கியுள்ளது. இதனால் சிறுவன் அல்லோ கல்லப்பட்டு அழுத சத்தம் போட்டுள்ளான் இந்நிலையில் சமையல் அறையில் நின்று கொண்டிருந்த தாய் உடன் விரைந்து தனது மகனை மீட்டுள்ளார். இந்நிலையில் மகன் உயிருடன் மீட்கப்பட்டதுடன் தாய்க்கு மின்சாரத் தாக்கமுற்று உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த தாயின் உடலில் மின்சாரம் முழுமையாக பாய்ந்ததன் காரணமாக உடல் நீலநிறமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சடலம் கல்முனை ஆதார வைத்தியசாலையில் பிரதப்பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. உயிரிழப்பு சம்பந்தமாக களுவாஞ்சிகுடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

SHARE

Author: verified_user

0 Comments: