17 Oct 2017

தேங்காய்க்கு கடும் கிராக்கி நிலவும் இக் காலத்தில் கிராமங்களில் தெங்கு உற்பத்தியை விரிவுபடுத்தவேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன்

SHARE
தேசிய ரீதியில் தேங்காய்க்கு கடுமையான கிராக்கி தற்போதும் இருந்துகொண்டே வருகின்றது இந் நிலை எதிர்காலத்திலும் தொடரலாம். எனவே எமது வவுணதீவு பிரதேசத்தில் தெங்கு உற்பத்தியை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக் குழு தலைவருமான ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.வவுணதீவு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் திங்கட்கிழமை 16ஆம் திகதி மண்முனை மேற்கு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில், பிரதேசத்தின் தெங்கு அபிவிருத்தி தொடர்பில் ஆராயப்பட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் பேசுகையில், எமது பிரதேசத்தில் தென்னந் தோட்டங்கள் செய்யக்கூடிய பிரதேசங்களையும் கிராமங்களையும் இனங்கண்டு அதில் தனியாரை இணைத்துக்கொண்டு அவர்களை ஊக்குவிப்பதன் மூலம் எதிர்காலத்தில் எமது பிரதேசத்திற்கு தேவையான தேங்காய்களை  ஓரளவேனும் பூர்த்தி செய்யமுடியும்.

1978ஆதாவது சூறாவளிக்கு முன்னர் இப் பிரதேசத்தில் ஏராளமான தென்னந் தோப்புகள் இருந்தன அந்தக் காலகட்டத்தில் பல தோப்புகள் அழிவடைந்தது. ஆனால் அதனை இன்னும் எவரும் ஈடுசெய்யவில்லை.

நமது மட்டக்களப்பிலே தெங்கு உற்பத்தி பிராந்திய நிலையம் அமைந்துள்ளதால் மேற்படி திட்டத்தினை மேற்கொள்வதும் அதுதொடர்பில் ஆலோசனைகளைப் பெறுவதும் இலகுவாக அமையும். எனத் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: