ஆய்வுகளின்படி தரம் ஐந்துபுலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைகின்ற மாணவர்களில் நூற்றுக்கு இரு வீதமானவர்கள் மாத்திரமே பல்கலைக் கழக அனுமதியினைப் பெற்றுக் கொள்கின்றனர்.
எஞ்சியுள்ள தொண்ணூற்று எட்டு வீதமானவர்கள் ஏதோ ஒருவகையில் பல்கலைக் கழக அனுமதிபெறும் தகுதியினை இழக்கின்றனர். காரணம் பெற்றோர் தமது கௌரவத்தினை பாதுகாக்கும் நோக்குடன் குழந்தைகளின் விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் பரிட்சையில் சித்தியடைவதற்கான அழுத்தங்ளை பிரயோகித்து பரீட்சை சித்தியடைந்ததும் தமது பிள்ளையினை கற்றல்செயற்பாட்டில் கைவிடுகின்றனர். இதனால் அழுத்தங்களுக்கு உட்பட்ட பிள்ளைகள் தமது கற்றல் செயற்பாட்டிலிருந்து விடுபடுகின்றனர்.
இவ்வாறு பெரியகல்லாறுகிராமத்தில் நடைபெற்ற உளவளத் துறைசார் பிரச்சினைகள் தொடர்பான விழிப்பூட்டும் நிகழ்வு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் இரா .பிறேமராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் வளவாளராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மண்முனைதென் எருவில் பற்று பிரதேசசெயலக உளவள உத்தியோகத்தர் ராஜீஹ் மொஹமட் இவ்வாறுதெரிவித்தார்.
சமூகசேவைத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்வில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.உதயசுதன் உத்தியோகத்தர் திருமதி எஸ்.பிறேமா வளவாளராகவும் கலந்து கொண்டனர்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் இன்றையகாலகட்டத்தில் மனஅழுத்தம் சமூகத்தில் புரையோடிக் காணப்படுகின்றன. இவற்றுக்குபலகாரணங்கள் இருக்கின்ற போதிலும் அவற்றில் மிகமுக்கியமாளவை பொருளாதாரம் இகுடும்பச் சூழல் இகடன் சுமைபிரதான இடத்தினைப் பெறுகின்றன. இன்றையகாலகட்டத்தில் கடன் வழங்குவதற்குபலர் எமதுவாசல் கதவினை தட்டுகின்றநிலையில் மறு கணமேமன அழுத்தங்களுக்கு எம்மைமாற்றுகின்ற கலாசாரம் மாற்றமடைகின்றது. இவ்வாறான நிலைமைகளிலிருந்துவிலக வேண்டும் அப்போதுதான் எம்மைநாம் பாதுகாக்கமுடியும். மைக்ரோகிரடிற் கடன் முறை மூலமாகபலர் மன அழுத்தங்களுக்கு உள்ளாகும் நிலை உருவாகியுள்ளமை வேதனைதரக் கூடியவிடயமாகும்.
மன அழுத்தம் என்பது ஒவ்வொருவருக்கும் உள்ளது அதனை மாற்றும் திறனை உடையவர்கள் அதனால் ஏற்படும் பாதிப்புக்களிலிருந்துதப்பித்துக் கொள்கின்றனர். ஏனையவர்கள் பாதிப்பினை எதிர்கொள்கின்றனர். நாம் எமது அன்றாடவாழ்வில் வரவுக்கு ஏற்ப செலவினை திட்டமிட்டுமேற் கொள்கின்றபோது பொருளாதார். கஷ்டங்களிலிருந்து விடுபடுவது மாத்திரமல்லாது உளநலப் பாதிப்புக்களிலிருந்து விடுபட முடியும். எனத் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment