தீபாவளித் தினமான செவ்வாய்க்கிழமை ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி கிராமத்தில் இளவயதுத் தாயும் அவரது 11 வயது மகனும் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சவுக்கடி முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த மதுவந்தி பீதாம்பரம் (வயது 26) மற்றும் அவரது மகனான பீதாம்பரம் மதுஷன் (வயது 11) ஆகியோரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
வழமைபோன்று செவ்வாய்க் கிழமை இரவு நித்திரைக்குச் சென்றவர்கள் புதன்கிழமை காலை 9 மணியாகியும் வீடு பூட்டப்பட்ட நிலையிலேயே இருந்ததை அறிந்து சந்தேகத்தின் பேரில் வீட்டுக் கதவை உடைத்துப் பார்த்தபோது இரத்தவாறாக தாயும் மகனும் இறந்து கிடந்துள்ளனர்.
பின்னால் வந்து வீட்டுக் கூரையை பிரித்து உள்ளிறங்கிய நபர்களே இந்தப் படுகொலையைப் புரிந்துள்ளனர்.
உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த துப்பறியும் பொலிஸாரும் மோப்ப நாய்ப் பிரிவினரும் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.
படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவன் கடந்த 7 வருடங்களாக குவைத் நாட்டில் தொடர்ச்சியாக தொழில் புரிந்து வருவதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment