பட்டிருப்பு கல்வி வலயத்தில் சேவைக்கால ஆசிரிய ஆலோசகராக கடமையாற்றிய சீனித்தம்பி விசுவலிங்கம் தனது முப்பத்தி இரண்டுவருட கால கல்விச் சேவையை முடித்து இம் மாதம் 11.10.2017 ஆம் திகதியுடன் ஓய்வு பெற்றுக்கொண்டார்களுதாவளையை பிறப்பிடமாக கொண்ட இவர் தனது ஆரம்பக்கல்வியை களுதாவளை இராமகிருஸ்ணன் மிஷன் வித்தியாலயத்திலும், அதனைத்தொடரந்து தரம் 06 முதல் உயர்தரம் வரையான கல்வியை களுதாவளை மகா வித்தியாலயத்தில் பயின்றார். உயர் தரத்தில் கலைப்பிரிவில் பயின்று சித்தியடைந்து பேராதனை பல்கலைக்கழகத்திற்கு தேர்வாகி 1984 ஆம் ஆண்டு பட்டதாரியாக வெளியாகினார்.
1985.12.26 ஆம் திகதி பட்டதாரி ஆசிரியர் நியமனத்தினை எற்றுக் கொண்டு முனைத்தீவு சக்தி வித்தியாலயம், களுதாவளை மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் 11 வருடங்கள் சமூககல்வியும் வரலாறு எனும் பாடதில் சிறந்த ஆசிரியராக கடமையாற்றி குறித்த பாடத்தில் கூடுதலான மாணவரகள் தேர்ச்சியடைவதற்கு வழிகாட்டியாக திகழ்ந்தார். இந்த காலகட்டத்தில் 1992 ஆம் ஆண்டு தனது பட்டிப்பின் கல்வி டிப்ளோமாவையும் முடித்துக் கொண்டார்.
இவரது கற்பித்தல் திறன், பாடரீதியாக கொண்டிருந்த நிபுணத்துவம் ஆகியவற்றை கருத்திற் கொண்டு 1998 ஆம் ஆண்டு பட்டிருப்பு கல்வி வலயத்தின் சமூகக்கல்வியும் வரலாறும் எனும் பாடத்திற்கான சேவைக்கால ஆசிரிய ஆலோசகராக நியமிக்கப்பட்டார். பிற்காலத்தில் ஏற்பட்ட கலைத்திட்டமாற்றம் காரணமாக புவியியல், குடியுரிமைக்கல்வி, வரலாறு ஆகிய பாடங்களுக்கான சேவைக்கால ஆசிரிய ஆலோசகராக மாற்றம் பெற்று ஒய்வுபெறும் வரை 19 வருடங்கள் கடமையாற்றியிருந்தார்.
இக் காலகட்டத்தில் பட்டிருப்பு கல்வி வலயம் சமூகவிஞ்ஞான போட்டியில் தேசிய ரீதியில் பல சாதனைகளை நிகழ்த்துவதற்கு ஆசியர், மாணவர்களை தயார்படுத்துவதில் முன்னின்றுசெயற்பட்டார் அது மாத்திரமின்றி பாடசாலை மதிப்பீட்டு பணிகளின் போதும், பாடசாலை தரிசிப்பின் போதும் தன்னிடம் காணப்பட்ட பாடரீதியான நிபுணத்துவம், கற்பித்தல் நுட்பம், ஆகிய வற்றை ஆசிரியர்களுக்கு பகிர்ந்து கொள்ளவும் தவறவில்லை இதனால் இவர் ஆசியரியர் மத்தியில் மிகுந்த நன்மதிப்பினைப் பெற்றிருந்தார்..
0 Comments:
Post a Comment