மூன்று வருட ஆளுகைக் காலம் முடிவடைந்த நிலையில் ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்திற்கான பொதுச் சபைத் தெரிவு ஞாயிற்றுக்கிழமை 01.10.2017 ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தின் பொதுக் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
கடந்த மூன்று வருடமாக செயற்பாட்டிலிருந்து வந்துள்ள சம்மேளனம், அதன் பொதுச் சபை கடந்த 07.08.2017 அன்று புதிய யாப்புத் திருத்தங்களை ஏகமானதாக ஏற்றுக்கொண்டதன் பின்னர் புதிய நிருவாகத் தெரிவிற்காக கலைக்கப்பட்டிருந்தது.
புதிய தீர்மானத்திற்கேற்ப பள்ளிவாசல்கள், பாடசாலைகள், சங்கங்கள், கழகங்கள், சமூக நிறுவனங்கள் என்பனவற்றில் இருந்து புதிய பொதுச்சபைக்கான நிருவாகத் தெரிவு கட்டங்கட்டமாக இடம்பெற்று புதிய சம்மேளனத்திற்கு 61 நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள்.
அவர்களிலிருந்து ஞாயிற்றுக்கிழமை சமுகமளித்திருந்த 52 பேருக்கிடையில் பொதுச் சபை தெரிவு செய்யப்பட்டது.
புதிய பொதுச் சபையில் தலைவராக கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் அஷ்ஷேய்ஹ் எம்.எல். அப்துல் வாஜித், பொதுச் செயலாளராக ஏற்கெனவே செயலாளராகப் பணியாற்றிய ஆசிரியர் எம்.எல். செய்யது அஹமத், பொருளாளராக எம்.எச்.எம். ஜாபிர் உட்பட கல்விக் குழு, மார்க்க விடயங்களுக்கான குழு, மற்றும் இளைஞர் விவகாரங்களுக்கான குழு என்பனவற்றி;ற்காக 3 உப தலைவர்களும் 3 உப செயலாளர்களும் மற்றும் நிருவாகக் குழு என்பனவும் தெரிவு செய்யப்பட்டது.
சில தெரிவுகளுக்கு ஒன்றிற்கு மேற்பட்டோர் பிரேரிக்கப்பட்டதால் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு இடம்பெற்றது.
இதனிடைய முன்னர் தலைவர் மற்றும் செயலாளராகப் பணியாற்றிய ஏ.எசி.எம். ஷயீட் மற்றும் எம்.எல். செய்யது அஹமத் ஆகியோருக்கு நினைவுக் கேடயமும் வழங்கி வைக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment