பெண்கள் தலைமை தாங்கும் வாழ்வாதார குடும்பங்கள் பொருளாதாரத்தை நிறைவாக சேமித்துக் கொள்ளவேண்டும்.பொருளாதாரம் சேமிக்கப்பட்டால்தான் வாழ்வாதாரம் ஆரோக்கியமாக காணப்படும் என்று பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி.நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்தார். துறைநீலாவணையில் அம்கோர் சுய உதவிக்குழுக்களின் வியாபாரச் சந்தையும்,களியாட்ட நிகழ்வும் வெள்ளிக்கிழமை (22) பிற்பகல் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வாழ்வாதார சந்தையை ஆரம்பித்து வைத்து ஆரம்பித்து வைத்து பேசுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில்… இன்று பெண்களின் பொருளாதார பங்களிப்பு குடும்பத்திலும், சமூகத்திலும், நாட்டிலும் அத்தியவசியமாக உணரப்படுகின்றது. வறுமைப்பட்ட பெண்களின் பொருளாதாரத்தேடல் காலத்தின் தேவையாக இருக்கின்றது. இந்த பொருளாதாரத் தேடலில் மூலம் குடும்பத்தின் தேவையை சிறப்பாக நிறைவேற்றிக் கொள்ள முடிகின்றது. பிள்ளைகளின் கல்விச்செயற்பாடுகளுக்கும், அவர்களின் ஏனைய தேவைகளுக்கும் பொருளாதாரம் தேவையாகவுள்ளது. குறிப்பாக பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் நாளாந்தம் பொருளாதாரத் தேடல்களை சுயதொழில் முயற்சி மூலம் தேடுவதனால் தங்களின் குடும்பத்தை வளர்ச்சியுறச் செய்யலாம்.
பொருளாதாரத்தை தேடுவது மட்டுமல்ல பிற்காலத் தேவைக்கு பொருளாதாரத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் சேமித்து வைக்க வேண்டும். இவ்வாறான பொருளாதாரச் சேமிப்புக்கள் குடும்பத்தில் இரட்டிப்பு வேலைகளை செய்கின்றது. சில குடும்பங்கள் பொருளாதரத்தை சேமிக்காததால் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. முற்காலத்தில் பெண்கள் தலமைதாங்கும் குடும்பங்கள் சுயதொழில் செய்து பாரிய பொருளாதார சேமிப்புகளை செய்துள்ளார்கள். பெண்கள் சேமிப்பதில் பரீட்சயமிக்கவர்கள் என்று சேமிப்பு நிறுவனங்கள் கூறுகின்றது.
இன்று அம்கோர் நிறுவனம் துறைநீலாவணை கிராமத்தில் உள்ள பெண்களை ஒன்று திரட்டி அவர்களை தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட்டு சுயதொழிலில் ஈடுபடுத்தியுள்ளது. இது பாராட்டதக்க விடயமும், வரவேற்கத்தக்க விடயமாகும். இவர்களையும், இவர்களது குடும்பங்களையும் வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு சுயதொழிலில் ஈடுபடுத்தியிருப்பதை காணக்கூடியதாகவுள்ளது.
அதுமட்டுமல்ல நல்ல தலைமைத்துவ பண்புகளையும் வளப்படுத்தியுள்ளது. இந்த வாழ்வாதார சந்தையை தலைமைத்துவ பண்மைத்துவதுடன் ஒழுங்குபடுத்தியுள்ளது. இதன்மூலம் கிடைக்கும் பல்லூடகத்திறன்கள்,வர்த்தக அனுபவங்கள், மாற்றத்தின் வழிகாட்டல்கள், சந்தை வாய்ப்பு விடயங்கள், சமாதானம், நல்லிணக்கம் என்பனவற்றை வைத்துக்கொண்டு தங்களின் குடும்பங்களை சவால் மிக்க உலகிற்கு தயார்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இதன் மூலம் கிடைக்கும் அனுபங்கள், தலைமைத்துவ பண்புகள் என்பவை தங்களின் பிள்ளைகளுக்குரிய கல்விரீதியான விடயங்களையும் இனங்கண்டு பிள்ளைகளை சரியான பாதையில் வழிகாட்டுவார்கள் எனத் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment