21 Sept 2017

சிவாஞ்சலி கலைக் கூடத்தின் “பரதலய சங்கமம்”

SHARE
கொம்மாதுறை சிவாஞ்சலி கலைக் கூடத்தின் 12வது வருட நிறைவையிட்டு சிறப்பு நிகழ்வாக “பரதலய சங்கமம்” எனும் நாட்டிய அரங்கேற்றம் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
கல்குடா கல்வி வலயத்திலுள்ள செங்கலடி மத்திய மகா வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை 24.09.2017 பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகும் “பரதலய சங்கமம்” நிகழ்வில் இளம் கலைஞர்கள் பங்கு கொள்ளும் சுமார் 10 நாட்டியங்கள் அரங்கேற்றம் செய்யப்படவுள்ளதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக் கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சி. ஜெய்சங்கர் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார்.

கூடவே இன்னும் பல நாட்டிய கலைஞர்கள், அதிதிகளாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.

பொது அழைப்பின் பிரகாரம் ஆர்வமுள்ள கலைஞர்கள் இந்த“பரதயலய சங்கம” நிகழ்வுக்கு அழைக்கப்படுவதாகவும் ஏற்பாட்டுக் குழு மேலும் தெரித்துள்ளது.

Author: verified_user

0 Comments: