மட்டக்களப்பு திருப்பெருந்துறை திண்மக் கழிவு நிலையத்தில் கழிவுகளைக் கொட்ட முடியாது நீதிமன்ற தடை உத்தரவு உள்ள நிலையில் மட்டக்களப்பு மாநகர சபை, நகரத் தெருக்களின்; முக்கிய இடங்களில் உள்ள குப்பைகளை தனது கழிவகற்றும் வாகனங்களில் ஏற்றிக் கொண்டு சென்று மாநகர சபையின் முன்னால் நிறுத்தி வைத்துள்ளது.
இதுபற்றி மாநகர ஆணையாளர் வெள்ளக்குட்டி தவராஜாவிடம் வினவியபோது, (திங்கட்கிழமை 18.09.2017) தெரிவிக்கையில், வேறு வழியின்றி நகரைச் சுத்தப்படுத்த வேண்டிய தேவை உள்ளதால் மாநகரின் மக்கள் நடமாடும் முக்கிய இடங்களில் தேங்கிக் கிடந்த குப்பைகளை வாகனங்களில் அகற்றிச் கொண்டு வந்து ஒதுக்குப்புறமாக நிறுத்தி வைத்துள்ளோம்.
இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வரை வேறு காணிகளில் மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்காத இடங்களில் நகரக் கழிவுகளை பாதுகாப்பாக அகற்றுவதற்கு முயற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
பிரதேச மக்களின் சுற்றுச் சூழல் சுகாதாரம், மற்றும் நகரைத் தூய்மையாக வைத்திருத்தல் ஆகிய விடயங்களில் மாநகர சபையுடன் சேர்ந்து மக்களும் புரிந்துணர்வுடனும் அக்கறையுடனும் செற்பட வேண்டும்;. என்றார்.
0 Comments:
Post a Comment