5 Sept 2017

இரட்டையர்களைப் பாராட்டி பரிசு வழங்கி மகிழ்விப்பு

SHARE
ஒரே சூலில் பிறந்த இரட்டையர்களை ஒன்று கூட்டி மகிழ்வித்து, பாராட்டிப் பரிசு வழங்கும் நிகழ்வு செங்கலடி கணபதிநகர் கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டிடத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 03.09.2017 குதூகலிப்புடன் இடம்பெற்றது.

சமூக சேவையாளரான குணரெட்ணம் ஜெயப்பிரியன் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் சுமார் 25 இரட்டையர் சோடிகளும் அவர்களது குடும்பத்தாரும் ஒன்று கூடியிருந்தனர்.

இரட்டையர்களுக்கிடையே நடத்தப்பட்ட அதிர்ஷ‪;டக் குலுக்கலில் வெற்றிபெற்றவர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் நிகழ்வுகளில் பங்கு கொண்ட அனைவருக்கும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
மேலும், சுப்பர் பரிசாக பல்சர் மோட்டார் சைக்கிளும், லப்டொப்களும் அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும் எவரும் அந்த அதிர்ஷ்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கவில்லை.

தான் சிறுவயதில் தாயை இழந்திருந்ததால் கடந்த 15 வருடங்களாக அன்னையர் தினத்தை சிறப்பிக்கும் முகமாக பிரதேசத்திலுள்ள அன்னையர்களைக் கௌரவித்து பரிசளித்து மகிழ்வித்து வருவதாகவும் ஜெயப்பிரயின் தெரிவித்தார்.
தனக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்ததால் அதிலுள்ள மகிழ்ச்சி மற்றும் கரிசனைகள் பற்றிய வியடங்களை வெளிப்படுத்தும் விதமாக பிரதேசத்திலுள்ள இரட்டையர்களை மகிழ்விக்கும் நிகழ்வுகளை நடாத்த தான் உந்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்நிகழ்வு கடந்த இரு வருடங்களாக ஏற்பாடு செய்யப்பட்டு இரட்டையர்களின் ஒன்று கூடல் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்த  ஜெயப்பிரியன், எதிர்வரும் ஆண்டுகளில் இரட்டையர் மகிழ்விப்பு இன்னும் சிறப்பாக ஏற்பாடு செய்யும் உத்தேசம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அன்னையர் கௌரவிப்புக்காகவும் இரட்டையர்களை மகிழ்விப்பதற்காகவும் மேலும் பிற சமூக சேவைகளுக்காகவும் தனது சொந்த வருமானத்திலிருந்து மாதாந்தம் ஒரு பகுதியை ஆத்ம திருப்திக்காக  மீதப்படுத்தி வருவதாகவும் ஜெயப்பிரியன் மகிழ்வோடு தெரிவித்தார்.










SHARE

Author: verified_user

0 Comments: