மட்டக்களப்பு மாவட்டத்தில் வைத்தியசாலைகள் மற்றும், பொலிஸ் நிலையங்கள் உள்ளிட்ட சில இடங்களில்தான் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை தொடர்பான சம்பவங்கள் சட்டரீதியாக பதிவு செய்யப்படுகின்றன. கிராம மட்டங்களிலும், ஏனைய இடங்களிலும் இடம்பெறுகின்ற இன்னும், எத்தனையோ பாலியல் வன்முறைச் சம்பவங்கள் வெளிவராமலுள்ளன.
என மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் ச.சிவயோகநாதன் தெரிவித்தார்.
பெண்கள் மீதான் பாலியல் வன்முறைகள் தொடர்பில் செவ்வாய்க் கிழமை (12) தொடர்பு கொண்டு கேட்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….
வைதியசாலைகளிலும், பொலிஸ் நிலையங்களிலும் பதியப்பட்டுள்ள பாலியல் வன்முறைச் சம்பவங்களை வைத்துக் கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் பாலியல் வன்முறைகளை மட்டிட முடியாது. பல காரணங்களுக்காக இரகசியங்கள் பாதுகாக்கப்படுகின்றன. விழிப்புணர்வுகளும் இடம்பெற்று வருகின்றன. ஆனால் வன்முறைகளும், கலாசார சீர்கேடுகளும் இடம்பெற்றுத்தான் வருகின்றன.
சட்டபூர்வமாக கருக்கலைப்புக்கு அனுமதிவழங்க வேண்டும், பாலியல் தொழில் செய்வதற்கான அனுமதி வேண்டும், ஓரினச் செயற்கைக்கு அனுமதி கிடைக்க வேண்டும், என பலவற்றை அரசியல் யாப்பு திருத்தத்திலும் நாங்கள் தெரிவித்திருக்கின்றோம். ஏனெனில் இவ்வாறான விடையங்கள் வருமாக இருந்தால் மேலும் வன்முறைகள் குறைவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment