12 Sept 2017

காணாமலாக்கப்பட்டவர்களின் 276 குடும்பங்களுக்கு வீட்டு வசதிகளும், வாழ்வாதார வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

SHARE
எமக்கு நேரடியாக விண்ணப்பித்த 276 காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு, வீட்டு வசதிகளும், வாழ்வாதார வசதிகளையும் நாம் செய்து கொடுத்துள்ளோம். என மட்டக்களப்பு மாவட்ட கச்சேரியின் திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடும்செழியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பிலிருந்து காணாமலாக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் வாழ்வாதார உதவித்திட்டங்கள் தொடர்பில் செவ்வாய்க் கிழமை (12) தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான விபரத்திரட்டு மட்டக்களப்பில் இதுவரையில் இல்லை. நாங்களும் உத்தியோக பூர்வமாக எடுக்கவில்லை அதற்கு இன்னும் அரசாங்ககுகம் அனுமதி தரவில்லை. இவ்விடையம் தொடர்பில் சரியான தகவல் திரட்டு இல்லாமல் அடுத்த கட்ட செயற்பாடுகளுக்குச் செல்ல முடியாமலுள்ளது. 

நிச்சயமாக காணமாலாக்கப்பட்டவர்களின் விபரங்கள், அவர்களது குடும்ப பின்னணி அவர்களுக்கு வீடு இருக்கா, வாழ்வாதாரத்திற்கு உதவிகள் தேவையா, உள்ளிட்ட விடையங்கள் அடங்கலான விபரங்கள் இருந்தால்தான் அந்தக் குடும்பங்களுக்கு நாமும் உதவிகளைச் செய்யலாம்.  

எமக்கு நேரடியாக விண்ணப்பித்த 276 காணாமலாக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீட்டு வசதிகளும், வாழ்வாதார வசதிகளையும் நாம் செய்து கொடுத்துள்ளோம் என என மட்டக்களப்பு மாவட்ட கச்சேரியின் திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடும்செழியன் மேலும் தெரிவித்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: