ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளிக் கிராமத்தில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரு வாலிபர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை 10.09.2017 கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தமக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து உடனடியாக தாங்கள் நடவடிக்கையில் ஈடுபட்டபோது சந்தேக நபர்களைக் கைது செய்ததோடு அவர்கள் வசம் இருந்த ஹெரோயினையும் கைப்பற்றியதாகத் தெரிவித்த பொலிஸார் இது பற்றி மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினர்.
0 Comments:
Post a Comment