11 Sept 2017

மாகாண சபைகள் அதிகாரம் மற்றும் இதர சட்டங்களை உள்ளடக்கிய 20ஆவது சட்டமூலம் கிழக்கு மாகாண சபையில் நிறைவேறியுள்ளது.

SHARE
மாகாண சபைகள் அதிகாரம் மற்றும் இதர சட்டங்களை உள்ளடக்கிய 20ஆவது சட்டமூலம்  கிழக்கு மாகாண சபையில் திங்கட் கிழமை (11) நிறைவேறியுள்ளது. பலத்த சந்தேகத்துடன் திங்கம் கிழமை  மாகாண சபை தந்திரதாஸ கலபதி தலைமையில் காலை 9.30 க்கு கூடியது. அதன் போது அவையில் ஆளும்கட்சி உறுப்பினர்கள் பிரசன்னமாகியில்லாத காரணத்தால் மீண்டும் 11.30 ஒத்திவைக்கப்பட்டது.
குறிப்பிட்ட 11.30க்கும் ஆளும்கட்சி உறுப்பினர்களின் பிரசன்ன மின்மை காரணமாக சபை நடவடிக்கை மீண்டும் மதியம் 1.00 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதன்போது பெரும் அமளி துமளியுடன் ஆளும்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் குறித்த சட்ட மூலம் சபையில் நிறைவேறியதும் சபை நடவடிக்கை முடிவுறுத்தப்பட்டன.


இதின்போது 24 ஆதரவுகளும், 08 எதிர்ப்பான வாக்களிப்புடன் வெற்றிபெற்றதுடன் 01 நடுநிலமையும் பேணப்பட்டதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: