மொழிக்குத் துணை முருகா வெனு நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தொளும் பயந்த தனி
வழிக்குத் துணை வடி வேலஞ் செங்கோடன் மயூரமுமே
இலங்கை மட்டக்களப்பு கோவில்போரதீவு வெள்ளை நாவலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி தேவஸ்தான அதி சுந்தர துவிதல நூதன விமான சகித புனராவர்த்தன திரியத்திரிம்சத் குண்ட (33) உத்தமோத்தம பக்ச மஹாயாக பிரதிஸ்டா திருக்குட திருமஞ்சன பெருஞ்சாந்தி பெருவிழா மிகவும் சிறப்பாக 23.08.2017 கர்மாரம்பத்துடன் இடம்பெறுகின்றது.
எதிர்வரும் 28.08.2017, 29.08.2017 பால்காப்பு நிகழ்வும், 31.08.2017 வியாழக்கிழமை மூல நட்சத்திரமும் தசமி திதியும் சித்த யோகமும் துலா லக்கினமும் கூடிய புண்ணிய சுப தினத்தில் காலை 9.28 மணி முதல் 10.36 மணி வரையுள்ள சுப முகூர்த்தத்தில் புனராவர்த்தன பிரதிஸ்டா மஹா கும்பாபிசேகமும் இடம்பெறவுள்ளது.
0 Comments:
Post a Comment