6 Jul 2017

சிவாநந்தா தேசிய பாடசாலையின் சாரணர் மாணவர்களால் சிரமதானம்.

SHARE
(MSM) 

மட்டக்களப்பு சிவாநந்தா தேசியபாடசாலையின் சாரணர் இயக்கத்தை சேர்ந்தமாணவர்களால் சாரணர் வாரத்தை முன்னிட்டு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்கப்பு பிராந்திய முகாமையாளர் அலுவலக வளாகத்தில் சிரமதானபணி ஒன்று புதன் கிழமை (05) இடம் பெற்றது.

இதன் போது இம்மாணவர்களின் இவ்வாறான பணிகுறித்து தேசியநீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் டி.எ. பிரகாஷ் குறிப்பிடுகையில்…. 

இவ்வாறான பொதுப்பணிகளில் ஈடுபடுகின்ற மாணவர்கள் எதிர் காலத்தில் சமூகம் மதிக்கத்தக்க தலைவர்களாக உருவாகின்றனர் என்றார். மேலும் இச்சிரமதானத்தினை இங்குமேற்கொள்வதற்கு உதவியபாடசாலையின் அதிபர் இம்மாணவர்களை வழி நடத்திய ஆசிரியர் மற்றும் இச்சிரமதானத்தில் ஈடுபட்ட சிவாநந்தா தேசியபாடசாலையின் சாரணர் இயக்கத்தை சேர்ந்தமாணவர்கள் அனைவருக்கும் தமது நன்றியினையும் தெரிவித்துக் கொண்டார்.




SHARE

Author: verified_user

0 Comments: