மட்டக்களப்பு மாவட்டத்திலே 75 வீதம் தமிழர்களும், 25 வீதம் முஸ்லிம்களும் வாழ்கின்றார்கள். முஸ்லிங்களின் கபட நாடகத்தினாலும், அவர்களுக்கு ஒத்து ஊதக்குடிய சில தமிழர்கள் பெற்றுக் கொடுக்கும் வாக்குகளினாலும், 75 வீதமுள்ள தமிழர்களுக்கும் 3 நாடாளுமன்ற பிரதிநிதிகள், 25 வீதமுள்ள முஸ்லிம்களுக்கும் 3 நாடாளுமன்ற பிரதிநிதிகள் உள்ளார்கள். இந்த நிலமை மாறவேண்டும். இது இனவாதம் இல்லை, எமது உரிமைகளை இன்னுமொருவர் தட்டிப்பறித்துச் செல்வதற்கு நாங்கள் ஏமாழிகளாக இருக்கக் கூடாது. எனவே பெரும்பான்மைக் கட்சிகளில் தேர்தல் காலங்களில் வரும் நபர்களை எமது மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது
என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிம் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.
என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிம் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.
மட்.களுமுந்தன்வெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்று கடந்த 2016 ஆம் ஆண்டில் உயர்தரத்திற்குத் தெரிவான மாணவர்கள், மற்றும் இக்கிராமத்திலிருந்து 2017 ஆம் ஆண்டில் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவான மாணவர்கள், பாடசாலையில் மிக நீண்ட காலமாக கற்பித்து பதவி உயர்வு பெற்றுச் சென்ற ஆசிரியர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும், கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) அவர்களினால் இப்பாடசாலைக்கு நிழற்பிரதி கையளிக்கும் நிகழ்வும் பாடசாலையில் சனிக்கிழமை (01) நடைபெற்றது.
பாடசாலை அதிபர் சி.சிவபாதம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிராமம் பெரியோர்கள், பழைய மாணவர்கள், பொதுமக்கள், மாணவர்கள், ஆசிரிர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…..
அடுத்த தேர்தலில் எனக்கு வாக்குக் கிடைக்க வேண்டும் என நான் சேவை செய்பவன் அல்ல ஏனெனில் நான் அரசியலுக்காக வந்தவனும் அல்ல அரிசியல்தான் எனக்குத் தொழிலும் அல்ல. தற்செயலாக போராட்டத்திற்குச் சென்ற நான் இலங்கை இந்திய ஒப்பந்தம் எற்படுத்தப் பட்டதன் பின்பு எமது தமிழீழ விடுதலை இயக்கம் ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டதன் காரணமாக அதனூடாகத்தான் நான் அரசியலுக்குள் நுளைந்தேன். 2009 இற்கு முன்னர் வடக்கு கிழக்கில் அரசியல் ரீதியாகவும், அதிகார ரீதிகாகவும், கோலோட்சியிருந்தார்கள் 2009 இற்குப் பின்னர் அவர்களது பிரசன்னம் இல்லாமல் சென்றது. பின்னர் மக்களின் தேவையறிந்து சேவை செய்ய வேண்டும் என்ற நோக்குடன் எனக்குக் கிடைத்த பிரித்தானிய பிரஜா உரிமையை அந்நாட்டு அரசாங்கத்திடம் திருப்பிக் கொடுத்து மீண்டும் இங்கு வந்து சேவை செய்து கொண்டிருக்கின்றேன்.
அரசியல் என்பதும் அரசியல்வாதி என்பதும் தேர்தல் காலத்திலே வரும் வேட்புமனுத் தாக்கல் செய்யும் காலத்தில் மாத்திரம்தான் ஒரு அரசியல் வாதிக்கு இருக்க வேண்டும், தேர்தலில் வெற்றி பெற்றால் தனக்கு வாக்களித்தவர்களுக்கும்;, வாக்களிக்காதவர்களுக்கும் மாவட்டம் முழுவதும் சேவை செய்ய வேண்டும். மக்கள் பிரதிநிதிகளாக இருந்தால் நிகழ்வுகளில் கலந்து கொண்டு பொன்னாடைகளைப் பெற்றுக் கொள்வதும் நாடாக்களை வெட்டி திறப்பு விழாக்களைச் செய்வது செய்வது மாத்திரம் அவர்களின் தொழில் அல்ல அவர்கள் மக்கள் சேவகனாக இருக்க வேண்டும்.
யுத்தத்திற்குப் பின்னர் எமது வழிபாட்டுத்தலங்கள் பல அழிக்கப்பட்டுள்ளன. அலரிமாழிகைக்குப் பின்னால் இருந்த கருமாரியம்மன் கோயில் இல்லாமல் போனது, பொலநறுவையில் இருந்த கோயில் இல்லாமல் போனது, ஓட்டமாவடியில் இருந்த கோயில் இல்லாமலாக்கப்பட்டது.
ஓட்டமாவடியில் இருந்த காளியோயிலை நான்தான் அழித்தேன் என்னுடைய காலத்தில்தான் அங்கு மீன் சந்தை கொண்டுவதப்பட்டது என அமைச்சர் ஹிஸ்புல்லா வீடியோ ஒன்றின் மூலம் தெரிவிக்கின்றார்.
தமிழீழ விடுதலைப் புலிகளைப் பிரிய முற்பட்ட காலத்திலே கருனாவை தன்னுடன் பெற்றுக் கொண்டு போராட்டத்தை சின்னாபின்னமாக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாகிர் மௌலான அவர்கள் அவரது மனைவி தமிழ் என்று தமிழ் மக்களிடம் தேர்தல் காலங்களில் வாக்குப் பிச்சை பெற்றுக் கொண்டுவிட்டு கடந்த வெள்ளிக்கிழமை (30) மட்டக்களப்பு நகரில் பள்ளிவாசல் இருந்த இடத்திலே இராஜகுமாரிகள்; நிலையம் அமைக்கப்பட்டுள்ளது அந்த இடத்தை மீளத்தருமாறு கோரி சில முஸ்லிம்கள் நடாத்திய ஆப்பாட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாகிர் மௌலான தலைமை தாங்கியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற அலிசாகிர் மௌலான அவர்களுக்குச் சட்டம் தெரிந்திருக்க வேண்டும், அவை சம்மந்தமான நடைமுறைகள் தெரிந்திருக்க வேண்டும். அந்த உரிய இடம் இராஜகுமாரிகள் நிலையத்திற்குத்தான் சொந்தமானது என்ற நீதிமன்றத் தீர்ப்பும் கிடைத்தவுடனும், மீண்டும் ஆர்ப்பாட்டம் நடாத்துகின்றார்கள் என்றால் அவர்கள் அரசியலுக்காகப் போடும் நடாகம் இதுவாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்திலே 75 வீதம் தமிழர்களும், 25 வீதம் முஸ்லிம்களும் வாழ்கின்றார்கள். முஸ்லிங்களின் கபட நாடகத்தினாலும், அவர்களுக்கு ஒத்து ஊதக்குடிய சில தமிழர்கள் பெற்றுக் கொடுக்கும் வாக்குகளினாலும், 75 வீதமுள்ள தமிழர்களுக்கும் 3 நாடாளுமன்ற பிரதிநிதிகள், 25 வீதமுள்ள முஸ்லிம்களுக்கும் 3 நாடாளுமன்ற பிரதிநிதிகள் உள்ளார்கள். இந்த நிலமை மாறவேண்டும். இது இனவாதம் இல்லை, எமது உரிமைகளை இன்னுமொருவர் தட்டிப்பறித்துச் செல்வதற்கு நாங்கள் ஏமாழிகளாக இருக்கக் கூடாது. எனவே பெரும்பான்மைக் கட்சிகளில் தேர்தல் காலங்களில் வரும் நபர்களை எமது மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டதிலே அமைச்சர் ஹில்புல்லாவோ அல்லது அவர்களின் ஆட்களோ வரவில்லை வரவும்மாட்டார். ஏனெனில் பொது நிகழ்வென்றிலே காளிகோயில் காணியை தான் பெற்றுக் கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார். அமைச்சர் அமீரலியும் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருக்கவில்லை, மாறாக இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எமது தமிழ் இளைஞர்களும் பதிலடி கொடுத்திருக்கின்றார்கள்.
எதிர்வரும் காலத்தில் நிதானமாக சிந்தித்துச் செயற்பட வேண்டும் எமது பிரதேசங்களை நாங்கள் அபிவிருத்தி செய்ய வேண்டும். இந்த ஆண்டு கிழக்கு மாகாணசபையின் ஆட்சி முடிவுறுவதற்கு நெருங்கிக் கொண்டிருக்கின்றது. எதிர் வரும் செப்டம்பர் மாதமளவில் 5 வருட ஆட்சியை கிழக்கு மாகாணசபை பூர்த்தி செய்து கலைக்கப்படும் நிலையில் உள்ளது. இந்த வருட இறுதியில் தேர்தல் வரும் சந்தர்ப்பமும் உள்ளது. கடந்த தவறை எதிர் காலத்திலும் நாம் விடக்கூடாது. கடந்த முறை 11 ஆசனங்களை கிழக்கு மாகாணசபையில் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு இம்முறை ஆகக் கூடியது 15 உறுப்பினர்களையாவது பெறவேண்டும்.
வடக்கில் ஒருவித குழப்ப நிலை இருந்தாலும் அனைவரும் அனைவரும் தமிழர்களாகத்தான் உள்ளார்கள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்குடன் வெளிஉலக சக்திகள் வடக்குக்கு நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றார்கள்.
தமிழர்கள் ஒற்றுமையில்லாமல் அடிபட்ட சரித்திரங்கள்தான் அதிகம். சேர,சோள,பாண்டியன், ஆகியோர் தமிழ்நாட்டிலே அடிபட்டார்கள், வடக்கில் யார் அடிபட்டாலும் தமிழன்தான் ஆட்சி செய்வான் ஆனால் கிழக்கைப் பெறுத்தமட்டில் நிலமை அவ்வாறில்லை, இந்நிலையில்தான் கிழக்கிலுள்ள அனைத்து தமிழர்களும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். இணைந்த வடகிழக்குப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. கிழக்கு மாகாணம் தனிமையில் இருக்கும் போது ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் எங்களுக்குள் நாங்கள் அடிபட்டோமானால் நாங்களும் அடிபடுவோம், எமது மக்களும் அடிபடுவார்கள். வடக்கில் கட்சிகள் அடிபட்டால் கட்சிகளுக்குமாத்திரம்மான் சேதம் அங்குள்ள மக்களுக்குச் சேதம் இல்லை. இங்கு நிலமை அவ்வாறு இல்லை கட்சிகள் அடிபட்டால் கட்சிகளுக்கும் சேதம், மக்களுககும் சேதம் நிலமை இதுதான் நிலமை மாறவேண்டும். எதிர் காலத்தில் எங்களை நாங்களே ஆளக்கூடிய சுயாட்சி உருவாக வேண்டும் என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment