மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள விவேகானந்த தொழில் நுட்பவியல் கல்லூரி தனது 5வது ஆண்டு நிறைவு அகவை விழா செவ்வாய்க் கிழமை (04) சமூகநலன்புரி அமைப்பின் தலைவர் எஸ்.திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கல்லடி இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமிபிரபுபிறேமானந்திஜீ மகராஜ், மாவட்ட உதவி செயலாளர் ஆ.நவேஸ்வரன்;, மூன்றாம் நிலைக் கல்வி தொழில்க் கல்வி ஆணைக்குழு பணிப்பாளர் வஜிரபெரேரா, சர்வதேசதொழிலாளர் ஸ்தாபனதேசியதிட்ட இணைப்பாளர் ஆர்.சிவப்பிரகாசம், கனடாவில் இருந்துவருகை தந்தவிசாகன் முருகேசு மற்றும் அவரது துணைவியார், கிழக்கு பல்கலைக்கழக பிள்ளை நலத்துறை பேராசிரியர் எம்.செல்வராஜர், வேள்ட் விஷன் நிறுவனத்தின் பிரதேச அபிவிருத்தி முகாமையாளர் இ.மைக்கல், கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் எஸ்.சசிதரன், மாவட்ட தொழில்ப் பயிற்சி அதிகாரசபை பணிப்பாளர் எம்.வீ.நளீம், உயர் தொழில் நுட்பவியல் நிறுவன இணைப்பாளர் எஸ்.ஜெயபாலன், மட்டக்களப்பு கணினி மற்றும் காட்சிப்படுத்தல் தொழில் நுட்ப சம்மேளனத் தலைவர் வீ.ஆர்.மகேந்திரன் மற்றும் வெரன்டினா தொழில் நிலைய முகாமையாளர் எஸ்.டினேஸ், மதகுருமார், தொழில் வளங்குனர்கள், அரச, அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பாடசாலை அதிபர்கள், சமூகநலன்புரி அமைப்பு விவேகானந்த தொழில் நுட்பவியல் கல்லூரி மற்றும் திலகவதியார் மகளிர் இல்ல சேவையாளர்கள், மாணவர்கள், எனபலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந் நிகழ்வின் விசேடநிகழ்வாக கல்லூரியின் 5 வருடசெயற்பாடு, கல்லூரியின் திட்டங்கள், மற்றும் பல்வேறுபட்ட ஆக்கங்கள் அடங்கிய “பாசறை” என்னும் நினைவுமலர் ஒன்று வெளியீட்டு வைக்கப்பட்டன. கல்லூரிக்கும் அதில் பயிற்சி பெற்றபயிலுனர்கள் ஒன்றிணைந்த விவேகானந்த இளைஞர் அணிக்கும் தொடர்ச்சியான நிதியுதவியினை வழங்கிக் கொண்டிருக்கும் கனடாவில் வசிக்கும் விசாகன் முருகேசு தம்பதிகளை கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
அத்தோடு கல்லூரிக்கு கிடைத்துள்ள தரமுகாமைத்துவ முறைமை அங்கீகாரத்திற்காய் பாடுபட்ட கல்லூரியின் சேவையாளர்களை பாராட்டி சான்றிதழ்களும் இதன்போது வழங்கி வைகக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட மூன்றாம் நிலைக் கல்வி தொழில்க் கல்வி ஆணைக்குழு பணிப்பாளர் வஜிரபெரேரா இதன்போது கருத்து தெரிவிக்கையில்…..
தற்போது தேசிய தொழில்சார் தகைமைக் கல்வியே எதிர்காலத்தில் தொழிலினை பெற்றுக்கொள்வதற்கு இலகுவானதாக அமைவதோடு, அரசும் அதற்கேற்ற வகையில் சுற்று நிருபங்களை தயாரித்து வருகின்றது, அரசசார்பற்ற நிறுவனங்களாக இருந்தாலும் விவேகானந்த தொழில் நுட்பவியல் கல்லூரி சிறப்பான முறையில் பயிற்சியினை வழங்கிவருகின்றது , கிழக்குமாகாண இளைஞர், யுவதிகள் இங்கு டிப்ளோமா பயிற்சியினை இங்கு தொடர்வதற்கு நல்லசந்தர்ப்பம் , தொடர்ந்து இறுதி மட்டமான பட்டப்படிப்பினை கொழும்பில் உள்ள வாழ்க்கைத் தொழில்சார் தொழில் நுட்பவியல் பல்கலைக்கழம் சென்று ஒரு தொழில்சார் பட்டதாரியாக வெளிவர வேண்டும் என தெரிவித்தார்.
சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனதிட்ட இணைப்பாளர் ஆர்.சிவப்பிரகாசம் இதன்போது கருத்து வெளியிடுகையில்…..
இந்தக் கல்லூரியுடன் கடந்த 2 வருடங்களாக இணைந்து செயற்றிட்டங்களை முன்னெடுப்பதாகவும், பயிற்சியினை மாத்திரம் வழங்காமல் பயிற்சியின் பின்னரான தொழிலினையும் பெற்றுக் கொடுக்கக்கூடிய வகையில் பயிற்சிகளை வடிவமைத்து வழங்குவது கல்லூரியின் சிறப்பம்சம் எனகுறிப்பிட்டார்.
அத்தோடு விரிவுரையாளர் எஸ்.சசிதரன் கல்லூரியின் கற்பனை என்ற தலைப்பிலான விவரணத்தினை உலகளாவியரீதியில் உள்ள தேவைப்பாடுகள் மற்றும் விவேகானந்தரின் கொள்கைகள் அதிலிருந்து கல்லூரியும் அதன் நிறுவுனரும் எடுத்துக்கொண்டுள்ள செயற்பாடுகள், கல்லூரியின் ஆதாரமான ஆன்மீகத்தை தழுவிய சேவையே தொடர்ச்சியான வளர்ச்சிக்கு பங்களிக்கின்றது.
கல்லூரியின் எதிர்கால திட்டமிடலில் சிறந்த தொழில் வழிகாட்டலை வழங்கக்கூடிய ஒருபிரிவு, தொழில் சந்தைவாய்ப்பு பற்றிய ஆய்வினை நடாத்தி அதுபற்றிய ஆவணப்படுத்தல் பிரிவினை நவீனமுறையில் நிறுவல், மற்றும் நவீனமயப்படுத்தப்பட்ட மற்றும் மின் நூலகம் அமைத்தல் போன்ற திட்டங்களை உள்ளடக்கிய செயற்பாடுகளை முன்னெடுத்தல் தற்போதைய காலத்தின் தேவையாகும் எனகுறிப்பிட்டார்.
கல்லூரியின் 5 வருடகால செயற்பாடுகளையும், அதன் வளர்ச்சியினையும், கல்லூரியின் பயிற்சி நடவடிக்கைகளின் மாற்றங்கள் பற்றியும் தெளிவுபடுத்தியதோடு அனைவருக்கும் கணினி அறிவுகிடைக்க வேண்டும் என்று இலவசமான பயிற்சியினை நடாத்துவதற்காக ஆரம்பித்த இந்தக் கல்லூரி தற்போது கணினித் துறையில் வேலைவாய்ப்பு உள்ள பயிற்சியின் நடாத்தி தொழிலினைப் பெற்றுக் கொடுத்துள்ளதோடு தற்போது தொழில் நுட்பவியல் பயிற்சிகளையும், ஆங்கில மொழிவிருத்திப் பயிற்சிகளையும் தேசியதொழில் தகைமை முறையில் மட்டம் 5 வரை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்வதாக கல்லூரியின் பணிப்பாளர் க.பிரதீஸ்வரன் மேலும் தெரிவித்தார்.














0 Comments:
Post a Comment