2017ஆம் ஆண்டுக்கான விசேட நிதி ஒதுக்கீட்டில் திருகோணமலை மாவட்டத்தில் 38 அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக 20 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சினால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக விவரம் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது@ திருகோணமலையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டும் - செய்யப்படாமலும் இருக்கின்ற பகுதிகளின் அபிவிருத்திப் பணிகளுக்காக மேற்படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, மூதூர், தம்பலகாமம், கந்தளாய், வெருகல், குச்சவெளி, கிண்ணியா, தோப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பாடசாலை அபிவிருத்தி, குழாய் நீர் கிணறுகள், வீதி அபிவிருத்தி என பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
திருகோணமலை மாவட்ட மக்கள் பிரநிதிகளின் திட்ட மும்மொழிவுகளுக்கு அமைய 38 வேலைத்திட்டங்கள் இதன் மூலம் நடைமுறைப்படுத்தவுள்ளன.

0 Comments:
Post a Comment