28 Feb 2017

மட்.தும்பங்கேணி கண்ணகி வித்தியாலயத்தில் காட்டு யானை துவம்சம் .

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கால்வி வலயத்திற்குட்பட்ட தும்பங்கேணி கண்ணகி வித்தியாலயத்தினுள் செவ்வாய்க் கிழமை (28) அதிகாலை  ஒரு மணியளவில் புகுந்த காட்டுயானை பெரும் அட்டகாசத்தை ஏற்படுத்தி
துவம்சம் செய்துள்ளதாக மேற்படி வித்தியாலய அதிபர் வி.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

வழக்கம்போல் திங்கட் கிழமை பாடசாலை முடிந்து சென்றதாகவும் பின்னர் செவ்வாக்கிழமை காலையில் வந்து பார்க்கும்போது பாடசாலையின் சுற்று வேலினிய் ஒருபகுதி உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளதோடு, தென்னை, வாழை போன்ற பயிரினங்களையும் காட்டு யானை அழித்துவிட்டுள் சென்றுள்ளது.

தும்பங்கேணிக்கிராமத்தில் அதிகாலை ஒரு மளியளவில் புகுந்த தனியன் காட்டு யானை ஒன்றினால் மக்கள் பெரும் அல்லோல கல்லோலப்பட்டுள்ளனர். காட்டு யானையை விரட்ட முற்பட்ட வேளையில் அது முடியாமல் போனதனால் கிராம மக்கள், இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தீப்பந்தம் ஏந்தி கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானையை ஒருவாறு விரட்டியுள்ளர். 

இந்நிலையிலலே மட்.தும்பங்கேணி கண்ணகி வித்தியாலயத்திற்குள்ளும் புகுந்த துவம்சம் செய்துவிட்டுச் சென்றுள்ளது.

இதேவேளை திங்கட் கிழமை (27) நாற்பதாம் கிராமத்தினுள் புகுந்த தனியன் காட்டுயானையை அக்கிராம இளைஞர்கள் விரட்டியுள்ளனர்.

அண்மையில் இத்தும்பங்கேணி கண்ணகி வித்தியாலயத்தில் நடைபெற்ற மாலை நேர வகுப்புக்குச் சென்றுவிட்டு வீடுதிரும்பிக் கொண்டிருந்த மாணவி ஒருவரும் காட்டுயானை தாக்குதறுக்கிலக்காகி பாடுகாயமடைந்திருந்தார். இந்நிலையில், கடந்த வாரம் இப்பிரதேசத்திற்குட்பட்ட மட்.35 ஆம் கிராமத்தின் கண்ணன் வித்தியாலையத்தையும், காட்டுயானை துவம்வம் செய்திருந்ததோடு, மிக அண்மைக்காலமாக இப்பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசங்களும், தொல்லைகளும், இப்பகுதியில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.











SHARE

Author: verified_user

0 Comments: