(க.விஜி)
களுவாஞ்சிகுடி பொலீஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பிரதான வீதியில் திங்கட் கிழமை மாலை (27) இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு யுவதிகள் படுகாயமடைந்துள்ளார்கள்.
காயமடைந்த இரு யுவதிகளையும் பொதுமக்களின் உதவியுடன் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர் ஓந்தாச்சிமடத்தைச் சேர்ந்த இரண்டு யுவதிகள் தனியார் வகுப்புக்கு கல்முனைக்குச் சென்று மீண்டும் திரும்பிக் கொண்டிருந்த
இந்நிலையில் வீதி ஓரத்தில் நின்று கொண்டிருந்த கார் ஒன்று தீடீரென் குறுக்கிட்டதால் இவ்விபத்துச் சம்பவித்துள்ளது.
இந்த சம்பவத்திலேயே மோட்டார்சைக்கிளில் சென்ற இரு யுவதிகளும் படுகாயமடைந்துள்ளார்கள்.
19, 20 வயதுடைய யுவதிகளின் கால்கள், இடுப்புக்களில் பலமாக அடிக்கப்பட்டு இரத்தக்கறைகளுடன் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிசார் ஸ்தலத்திற்கு விரைந்து நிலமையினை அவதானித்ததுடன்
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
0 Comments:
Post a Comment