22 Feb 2017

மட்டு வலய அதிபர்களால் வளங்கள் சூறையாடப்பட்டு வருகிறது

SHARE
பாடசாலை மாணவர்களுக்கு வருகின்ற வளங்களை அதிபர்கள் சிலர் சூறையாடி வருகின்றனர்.குறிப்பாக இது மட்டக்களப்பு கல்வி வலயத்தில் இடம் பெற்று வருகின்றது என கிழக்கு மாகாணசபையின் பிரதிதவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா தெரிவித்தார்.நேற்று (21) கிழக்கு மாகாணபையின் 79வது அமர்வு தவிசாளர் தந்திரதாஸ கலபதி தலைமையில் கூடிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசுகையில் இன்று நாம் பின்தங்கிய பாடசாலைகளில் உள்ள மாணவர்களின் கல்வியை பற்றி கவனம் எடுத்து பேசிக் கொண்டு இருக்கின்றோம்.அதற்காக மாகாண அரசும் மத்திய அரசும் பல்வேறு திட்டங்களை அமுல்படுத்தி வருகின்ற போது ஆரையம்பதி மகா வித்தியாலய நிர்வாகம் அந்த நிதியை சூரையாடி விட்டு தமக்கான கட்டிடங்களை அமைத்து அதிலே வசதியான நிர்வாகத்தை நடாத்துகின்றனர்.ஆனால் மாணவர்கள் மழை காலங்களில் குடைகளைப்பிடித்து பாடசாலை வகுப்பிறைக்குள் இருந்து கற்கவேண்டியுள்ளது. 

இத் திட்டத்திற்கு அரசாங்கம் நிதி வளங்கிய போதும் ஒப்பந்தகாரர்கள் மேசடி காரணமாகவும் அதிபர்களின் மீதும் முறைப்பாடு வந்து நாம் நேரடியாக பார்வையிட்டு வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவித்தும் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை வலயக் கல்விப் பணிப்பாளரும் இந்த ஊழலுக்கு துணைபோகிறார் என எமக்கு சந்தேகம் எழுகிறது. இவ்வியடம் தொடர்பாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் உடனடியாக நடவடிக்கை மேற் கொண்டு அந்த பாடசாலைளிக் அதிபருக்கு எதிரான நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாணசபையின் பிரதிதவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: