3 Feb 2017

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட 240 குடும்பங்களுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைப்பு.

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட 240 குடும்பங்களுக்குரிய காணி உறுதிப் பத்திரங்கள் புதன் கிழமை (01) வழங்கி வைக்கப்பட்டதான மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் காலாநிதி.எம்.கோபாலரெத்தினம் வியாழக்கிழமை தெரிவித்தார்.

இதுவரைகாலமும் காணியில் குடியிருந்தவர்களுக்குரிய ஒப்பம் வழங்கப்பட்டிருந்தன. தற்போது அக்காணி குடியிருந்த மக்களுக்கே உரித்தான வகையில் அரசாங்கத்தினால் உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இப்பிரதேசத்தில் காணி உறுதிப்பத்திரமின்றி வாழ்ந்த 240 பேருக்கு உறுதிப் பத்திரங்கள் வழங்குவதற்காக வேண்டி பிரதேச செயலாளர், காணிப் பிரிவினர், உள்ளிட்டோர், துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு புதன் கிழமை (01) ஏறாவூரில் நடை பெற்ற  நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதியினால் இவர்களுக்குரிய காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கப் பட்டடதாக பிரதேச மண்முனை எதன் எருவில் பற்று பிரதேச செயலாளர் காலநிதி.எம்.கோபாலரெத்தினம் மேலம் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: