மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்தின் போரதீவுப் பற்றுக் கல்விக்கோட்ட காலசார மைய பொங்கல் விழா வெள்ளிக்கிழமை
(20) மூவின ஆசிரயர்கள், மாணவர்களின் பங்குபற்றுதலுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
போரதீவு பற்று கோட்டக் கல்வி அதிகாரி பூ.பாலச்சந்திரன் தலைமையில் வெல்லாவெளி கலைமகள் வித்தியாலய கலையரங்கில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம் அவர்களும், விஷேட அதிதிகளாக பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான எஸ்.ஞானராசா, கே.ஜெயந்திமாலா, மற்றும் வலயக் கணக்காளர் எஸ்.புஸ்பகாந்தி பாடசாலை வேலைகள் பரிசோதகர் ரீ.இராசநாயகம், மற்றும் மஃமூத்பாலிகா அதிபர் எஸ்.ஏ.சியாகத்அலி, அம்பாரை ரிதிகலதென்ன கல்லூரி அதிபர்.டீ.எம்.டீ.எஸ்.திசாநாயக்க, அம்பாறை கொத்மல வித்தியாலய அதிபர்.எம்.ஆர்.ரவீந்திரா, வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மற்றும் போரதீவுப்பற்றுக் கோட்ட அதிபர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இப் பொங்கல் விழாவில் பங்கு கொள்வதற்காக கல்முனை கல்வி வலயத்தில் இருந்து மஃமூத்பாலிகா முஸ்லிம் பெண்கள் பாடசாலை, அம்பாரை வலயத்தில் இருந்து கொத்மல வித்தியாலயம், ரிதிகலதென்ன கல்லூரி ஆகிய மூவின பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களினால் மூவினங்களையும் பிரதிபலிக்கும் கலை கலாசார நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டமை சிறப்பம்சமாகும்.
0 Comments:
Post a Comment