(துறையூர் தாஸன்)
எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் போன்றோரின் படைப்புக்கள் அனைத்தும் எமது தமிழ் சந்ததியினருக்கு எடுத்துக்காட்டுக்களாக அமைய வேண்டும். எமது மொழிச் செயற்பாடுகள் அருகிக் கொண்டு வரும் இந்நிலையில் படைப்பாளிகளின் செயற்பாடுகளால் எமது ழொழியை நிலை நிறுத்துகின்ற ஒன்றாகக் காணப்படுகின்றது. எம்மவர் மத்தியில் வருகின்ற வெளியீடுகள் அனைத்தும் புத்துயிரையும், புத்துணர்வையும் ஊட்டுகின்றன.
எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் போன்றோரின் படைப்புக்கள் அனைத்தும் எமது தமிழ் சந்ததியினருக்கு எடுத்துக்காட்டுக்களாக அமைய வேண்டும். எமது மொழிச் செயற்பாடுகள் அருகிக் கொண்டு வரும் இந்நிலையில் படைப்பாளிகளின் செயற்பாடுகளால் எமது ழொழியை நிலை நிறுத்துகின்ற ஒன்றாகக் காணப்படுகின்றது. எம்மவர் மத்தியில் வருகின்ற வெளியீடுகள் அனைத்தும் புத்துயிரையும், புத்துணர்வையும் ஊட்டுகின்றன.
பாண்டிருப்பு அகரம் சமூக அமைப்பு ஊடாக வெளியீடு செய்யப்பட்ட பல்சுவை விருந்து எனும் பல்சுவை இதழ் வெள்ளிக் கிழமை (06) மாலை கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அகரம் அமைப்பின் தலைவரும், விருந்து இதழின் ஆசிரியருமான செ.துஜியந்தன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது கலந்து பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதில் அவர் மேலும் குறிப்பிடுகையில்.
உலகத்திலே முதன் முதலாக உருவாக்கப்பட்டதுதான் தமிழ் மொழியாகும். இது உலகத்திலே மிகவும் பழமையானதும், செம்மையானதும், என்று சொல்லப்படுகின்றது. தமிழ் மொழி அருகிப் போய்விடக் கூடாது என்பதற்காக ரசியாவிலுள்ள ரசிய மாழிகையில்கூட பொறிக்கப்பட்டுள்ளது. அங்கிருப்பவர்களுக்கு அது ஏன் பொறிக்கப்பட்டுள்ளது என்பது தெரியாது. எனவே ரசியாவிலே தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். எனவே தமிழர்களாகிய நாம் தமிழுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
தற்போதைய காலகட்டத்தில் தமிழையும், தமிழர்களையும் கொச்சைப்படுத்துகின்ற செயற்பாட்டில் வேற்று இனத்தவர்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
தமிழை, தமிழ் இனத்தினை அழிக்க வேண்டும் என ஒருசாரார் விழிப்பாய் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர் ஆகவே நாங்கள் எட்டுத் திசைகளுக்கும் சென்று தழிழையும் தமிழ்ப் பண்பாடுகளையும் கலை கலாசாரங்களையும், மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டிய கடமைப்பாடு எமக்குள்ளது.
முதுமையான மொழி தமிழாக இருக்கின்றமையால் அந்தத் தமிழை பாதுகாக்கும் கடமைப்பாடு எங்களிடம் இருக்கின்ற தொன்றும் விசேடமாக வடகிழக்கிலே வாழ்கின்ற எமது தமிழர்கள் கலாசார பாரம்பரியங்களை பின்பற்ற வேண்டும். மேலைத்தேய கலாசாரங்கள் ஊடுருவி தமிழர்களின் பாரம்பரியமும் பண்பாடும் சிதறடிக்கப்படுகின்ற ஒருசூழ்நிலை நிகழ்ந்து கொண்டிருக்கிறன. இவற்றை நாம் தடுத்து நிறுத்த வேண்டும். இதற்காக வேண்டி சிறந்த சஞ்சிகைகளினூடாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.
மேலும் எமது கலை கலாசாரபண்பாட்டுப் பாரம்பரிய விடயங்களையும் தமிழர்களின் ஆதிகால வரலாற்றுச் சுவடுகளை எமது வருங்கால சந்ததிகளுக்காக சஞ்சிகைகள் மற்றும் சிற்றிதழ்களுக்கூடாகவே பதிவு செய்யப்பட வேண்டும். கல்முனை பிரதேசத்தை ஆட்சி செய்தது தமிழ் மன்னன் அவ்வாறு இருந்தும் அது கூட தற்போது திரிவு படுத்தப்பட்டு சொல்லப்படுகின்ற நிலைதான் இப்போதுகாணப் படுகின்றன. இவ்வாறு திரிவுபடுத்தப்படுகின்ற விடயங்களை சிற்றிதழ்கள்கள் இனிவருங் காலங்களில் தெட்டத் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும் சஞ்சிகைகளை எமது வருங்காலச சந்ததியினருக்கு எமது பாரம்பரிய வரலாற்றுத் தடயங்களை கற்றுக்கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்தர்.
0 Comments:
Post a Comment