மட்டக்களப்பு மாவட்டம் துறைநீலாவணை கிராமத்திலுள்ள விஞ்ஞான விழிப்புணர்வு மற்றும் அபிவிருத்தி ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட துறைசார் விசேட
வைத்திய நிபுணர்கள் கலந்து கொள்ளும் இலவ சமருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை (18) காலை 8.00 மணிமுதல் முற்பகல் 11 மணிவரை துறைநீலாவணை மத்தியகல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இவ்வைத்திய முகாமில் அவுஸ்ரேலியாவிலிருந்து வருகைதந்துள்ள குடல் மற்றும் ஈரல் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் எஸ்.சிவதாசன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் விசேட பொதுவைத்திய நிபுணர்களான டாக்டர் முத்து முருகமூர்த்தி, டாக்டர் ஜெ.ஜெயரூபன் சிறுபிள்ளை விசேட வைத்திய நிபுணர் டாக்டர் சித்ரா வாமதேவன், தோல் சிகிச்சை விசேட வைத்தியநிபுணர் டாக்டர் என்.தமிழ்வண்ணன், உளநலவிசேட வைத்தியநிபுணர் டாக்டர் ரீ.கடம்பநாதன், போசாக்கு பற்றியகலந்துரையாடல் போசனை வைத்தியர் டாக்டர் எஸ்.விவேகானந்தன் மற்றும் கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையில் கடமை புரியும் மகப்பேற்றுமற்றும் பெண்நோயியல் விசேடவைத்திய நிபுணர் டாக்டர் யுரேகா விக்கிரமசிங்க உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும் கண் வைத்தியக் குழுவினால் கண் பரிசோதனைகளும் தொற்றாநோய் வைத்தியச் சேவையும், பல்வேறுதுறைசார் வைத்திய நிபுணர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த வைத்தியக் குழுவினால் மேற்க்கொள்ளப்பட்டு இலவசமாகமருந்துகளும் வழங்கப்படவுள்ளன.
நிறைகுறைவான 3 வயதுக்குட்பட்ட சிறுபிள்ளைகளுக்கும், உடற் திணிவுச் சுட்டி குறைவான கற்பினித்தாய்மார்களுக்கு மானபோசணை பற்றிய அறிவுறுத்தல் கலந்துரையாடல் போசணை மருத்துவர் எஸ்.விவேகானந்தன் அவர்களால் மேற்க்கொள்ளப்படவுள்ளளன.
சகல நோய்களுக்குமான மருத்துவச் சேவைகள் அனுபவம் வாய்ந்த வைத்தியக் குழுவினரால் மேற்க்கொள்ளப்பட்டு உயர்தர இலவச மருத்துவ சேவையினையும் இலவச மருந்துகளையும் பெற்று அனைவரையும் பயனடையுமாறு துறைநீலாவணை விஞ்ஞான விழிப்புனர்வு அபிவிருத்தி ஒன்றியத்தினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
0 Comments:
Post a Comment