மட்டக்களப்பு கரிதாஸ் எகெட் நிறுவனத்தின் சர்வமத அமைப்புக்களின் ஏற்பாட்டில் “சமயங்கள் நமக்காக நாம் சமுகத்திற்காக” எனும் தொளிப்பொருளில் கிறிஸ்மஸ் ஒளி விழா நிகழ்வு அமைப்பின் திட்டமிடல் உத்தியோகஸ்தர் கிறிஸ்டி தலைமையில் வெள்ளிக் கிழமை (17) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு கரிதாஸ் எகெட் நிறுவனத்தின் பணிப்பாளர்
அருட்தந்தை யோன் டிலிமா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன் எகெட்
நிறுவனத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேசங்கள் ரீதியாக
அமைக்கப்பட்டுள்ள சர்வமத அமைப்புகள் மற்றும் சமாதானக் குழுக்களின் தலைவர்கள் உட்பட உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது கிறிஸ்தவம், இந்து, இஸ்லாம் என மத பேதமற்ற நிலையில் மக்கள் கலந்துகொண்டதுடன் கலந்து கொண்ட மத முக்கியஸ்தர்களினால் ஒளி விழா பற்றிய கருத்துக்கள், சர்வமத அமைப்புகளின் உறுப்பினர்களினால் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன. ஆத்துடன் சர்வமத மற்றும் சமாதான குழுக்களின்
நிகழ்வினைத் தொடர்ந்து சர்வமத அமைப்புக்கள் மற்றும் சமாதானக்
குழுக்களுக்கிடையில் தனித் தனியே கலந்துரையாடல் இடம்பெற்று எதிர்வரும்
காலங்களின் செயற்பாடுகள் தொடர்பில் கருத்துப் பரிமாறல்களும் இடம்பெற்றன. உறுப்பினர்களுக்கு அருட்தந்தை அவர்களினால் நினைவுப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment