3 Dec 2016

சேவை நிறுத்தம் முடிந்த போதும் பஸ் மீது கல்வீச்சு பயணிகளுக்கு காயம்

SHARE
தனியார் பஸ் சேவை நிறுத்தம் முடிவடைந்த போதும் பயணிகள் பஸ் மீது கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் மட்டக்களப்பு-காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் மீது இனந்தெரியாதோர் நடத்திய கல்வீச்சுச் தாக்குதலில் சுமார் 5 பயணிகள் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கறுவாக்கேணி பகுதியில் இரவு 10.35 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

தாக்குதலுக்குள்ளான பஸ் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டு பஸ் மீண்டும் புறப்பட்ட இடமான காத்தான்குடியை வந்தடைந்தது.

அந்த பஸ்ஸில் பயணித்தவர்களில் அவசர பயணத்தை மேற்கொண்டவர்கள் வேறு பஸ்களில் செல்ல ஏனையவர்கள் மீண்டும் காத்தான்குடிக்கே திரும்பியதாக பஸ் சாரதியும் நடத்துநரும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் பற்றி வாழைச்சேனைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 




SHARE

Author: verified_user

0 Comments: