வழமைக்கு மாறாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் சனிக்கிழமை அதிகாலையிலிருந்து காலை 8 மணி வரை பனிமூட்டம் காணப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர்.
கடந்த ஒரு சில நாட்களாக நிலவிய கடுங்குளிருக்குப் பின்னர் இந்தப் பனி மூட்டம் காணப்பட்டது.
இதனால் பிரதான நெடுஞ்சாலையில் பயணித்த வாகனங்கள் யாவும் முகப்பு வெளிச்சத்தைப் பாய்ச்சியவாறு செல்ல நேரிட்டது.
பனிமூட்டம் ஏறாவூர், புன்னைக்குடா, ஏறாவூர்ப்பற்று செங்கலடி பதுளை வீதிப் பகுதி, உன்னிச்சை, ஆயித்தியமலை, உறுகாமம், பெரியபுல்லுமலை, சித்தாண்டி, கிரான், பாசிக்குடா, கல்குடா ஆகிய பிரதேசங்களில் பரந்து காணப்பட்டது.
மூடுபனி இருந்த போதிலும், கடந்த சில நாட்களாக நிலவிய கடுங்குளிர் நிலைமை மாறிவிட்டது.
0 Comments:
Post a Comment