16 Dec 2016

களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலை இம்முறை தேசியரீதியில் இரண்டாம் இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது.

SHARE
(துறையூர் தாஸன்) 

தேசியஉற்பத்தித் திறன் 2015 இற்கானவிருதில் களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலை இம்முறை தேசியரீதியில் இரண்டாம் இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது.
இலங்கையிலுள்ள அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் மாகாண அமைச்சுக்களிடையே உள்ள பாடசாலைகள், வைத்தியசாலைகள், சுகாதாரசேவை நிலையங்கள், தொழிற்சாலை போன்றவற்றில் நடாத்தப்பட்ட தேசிய உற்பத்தித் திறன் தேர்வுகளில் தெரிவு செய்யப்பட்ட நிலையங்களுக்கான உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு விருதுவழங்கும் நிகழ்வு இரத்மலானை ஸ்ரீபன் ஸ்டூடியோவில் பெரும் பிரமாண்டகலை நிகழ்ச்சிகளுடன் புதன் கிழமை (14) நடைபெற்றது.

உற்பத்தித் திறனில் மேன்மையுற்று சிறந்தசேவையை மக்களுக்கு வழங்கும் அரசமற்றும் தனியார் நிறுவனங்களுக்கான போட்டிகளை பொது நிர்வாக அமைச்சு ஆண்டுதோறும் தேசியரீதியில் நடாத்திவருகின்றது. பொதுநிர்வாக அமைச்சு நிறுவனங்களுக்கு விஜயம் செய்து நிறுவனத்தின் சேவைகளின் தரம், செயற்பாடுகளின் வினைத்திறன், முகாமைத்துவம், மேம்படுத்தல், தலைமைத்துவம், பாவனையாளர் திருப்தி, பாதுகாப்பு போன்ற பல்வேறு விடயங்களை பரீட்சித்து நிறுவனங்களை தரப்படுத்துகின்றது.

அந்த வகையில் கடந்த மூன்று வருடங்களாக தேசிய உற்பத்தித் திறன் போட்டியில் தடம் பதித்து வெற்றியீட்டிய மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி ஆதாரவைத்தியசாலை இம்முறையும் தேசியரீதியில் இரண்டாம் இடத்தினை தட்டிக்கொண்டுள்ளது. புதன்கிழமை (14) விருதுவழங்கல் நிகழ்வின்போது இவ்வைத்தியசாலையின் வைத்திய வைத்திய அத்தியட்சகர் டாக்டர்.குணசிங்கம் சுகுணன் அவ்விருதினை வைத்தியசாலையின் சார்பாக தனதாக்கிக்கொண்டார்.


தேசிய உற்பத்தித் திறன் தேர்வுகளில் முதலாவது தடைவ தரவட்டத் தேர்வில் விசேட விருதினையும் இரண்டாவது தடைவ தேசியரீதியில் மூன்றாம் இடத்தினையும் மூன்றாவது தடவைதேசியரீதியில் இரண்டாம் இடத்தினையும் பெற்று 2015 ஆண்டுக்குரிய தேர்வில் தேசியரீதியில் இரண்டாம் இடத்தினையும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை தட்டிக்கொண்டுள்ளமையை அனைவரும் பாராட்டியுள்ளனர். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுநிர்வாக அமைச்சர் மத்துகம பண்டார, மற்றும் அமைச்சர்களான நிமல் சிறிபாலடிசில்வா, ஏ.எச்.எம்.பௌசி, உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், மற்றும் திணைக்களங்களின்  பணிப்பாளர்கள் என பலர் இதன்போது கலந்து  கொண்டிருந்தனர்.








SHARE

Author: verified_user

0 Comments: