(துறையூர் தாஸன்)
சிறுவர்களைப்போல் நாம் அனைவரும் எல்லோருடனும் அன்பாகவும் பண்பாகவும் தீய சிந்தனைகளை களைந்து ஒற்றுமையாக பழகுவதுடன் உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துபவர்களாக இருக்கவேண்டும் எமது பாவத்தில் இருந்த எம்மை மீட்டு தேவனுடன் ஒப்புரவாக்கவே இயேசுகிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தார்.
என இதன்போது கலந்து கொண்ட வணக்கத்துக்குரிய சகோதரர் பரமானந்தன், அல்பேட் சீவரெத்தினம், தெரிவித்தார்.
மட்டக்களப்பு மகிழூர்துனை முன்பள்ளி நிர்வாகத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற ஒளிவிழா நிகழ்வு வியாழக்கிழமை (15) மாலை, மட்டக்களப்பு மகிழூர்முனை மெதடிஸ்த சில்வவெஸ்ட் மண்டபத்தில் முகாமை குரு அருட்செல்வி.ஜோதினி சீனித்தம்பியின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வணக்கத்துக்குரிய சகோதரர் பரமானந்தன், அல்பேட் சீவரெத்தினம், கிராம உத்தியோகத்ஸ்த்தர்களான, இ.மதிதரன், எஸ்.உதயகுமார் உள்ளிட்ட பலர் இதன்போது கொண்டனர்.
முன்பள்ளி வரவேற்பு நடனத்துடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற்று இயேசுகிறிஸ்துவின் தேவ மகிமையையும் இறையாட்சியையும் வெளிப்படுத்தும் கரோல் கீதங்களும், நடனம், கதை, பேச்சு, கோலாட்டம், கவிதை போன்ற நிகழ்வுகழும் இடம்பெற்றன. இதன்போது கலந்து கொண்டு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்
பாவத்தின் பிரதிபலனான மரணத்திலிருந்தும் நரகத்திலிருந்தும் எம்மை மீட்டு சுகம், சமாதானம், நித்திய ஜீவன் என்பவற்றை எமக்கு அளிப்பதற்காகவே வந்துள்ளார்.
சுமார் 2000 வருடங்களுக்கு முன்பதாக பெத்லகேம் எனும் சிறிய ஊரில் இடம் பெற்ற கிறிஸ்து இயேசுவின் பிறப்பானது மானிட வரலாற்றின் ஒரு திருப்புமுனையாக இருந்துள்ளது. என அவர் குறிப்பிட்டார்
இதன்போது பங்குகொண்ட முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கு அதிதிகள் மற்றும் நத்தார் பாப்பாவினாலும் பரிசுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.










0 Comments:
Post a Comment