தேசிய உற்பத்தி திறன் 2015ம் ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்வு கொழும்பு இரத்மலானை ஸ்டெயின் அரங்கில் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தலைமையில் நேற்று(14) புதன்கிழமை இடம்பெற்றது.
தேசிய உற்பத்தித்திறன் செயலகம் அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதன்போது அமைச்சர் ஆர்.எம்.ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் உயர்அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.
தேசிய ரீதியாக முதல் மூன்று இடங்களையும் பெற்றுக்கொண்டவர்களுக்காக வழங்கப்பட்ட விருதில் மட்டக்களப்பு மாவட்டத்தினைச்சேர்ந்த திணைக்களங்கள், சேவை நிலையங்கள் போன்றனவும் பங்குபற்றி விருதினை பெற்றிருந்தனர்.
முதற்தடவையாக குறித்த போட்டியில் பங்குபற்றி மட்டக்களப்பு மாவட்டத்தின் மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலை தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தினை பெற்று நேற்றைய தினம் விருதினையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment