22 Dec 2016

வீட்டிலும் வேலைத் தளத்திலும் முதலுதவி அறிவைக் கொண்ட ஒருவராயினும் இருத்தல் உயிரைப் பாதுகாப்பதற்கு முடியும் - வசந்தராஜா

SHARE
ஒவ்வொரு வீட்டிலும்சரி ஒவ்வொரு வேலைத் தளத்திலும்சரி முதலுதவி அறிவைக் கொண்ட ஆகக் குறைந்தது ஒருவராயினும் இருத்தல் உயிரைப் பாதுகாப்பதற்கோ,
நோய் தீவிரமடையாமல் இருப்பதற்கோ அல்லது விரைவில் குணமடைவதற்கோ நிச்சயம் பங்களிப்பு செய்யும். என இலங்கை செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் தலைவரும், சிரேஸ்ட முதலுதவிப் பயிற்சிப் போனாசிரியருமான, த.வசந்தராஜா தெரிவித்துள்ளார்.

அக்ஸஸ் எஞ்சினியறிங் ஜயுஉஉநளள நுபெiநெநசiபெஸ நிறுவனத்தின் அந்நிறுவனத்தின் உத்தியோகத்தர்களுக்கு “வேலைத் தளத்தில் முதலுதவி” பயிற்சி எனும் தொணிப் பொருளின் கீழ் அந்நிறுவன உத்தியோகஸ்த்தர்களுக்கு புதன் கிழமை (21) கற்குடா செவன விடுதியில் அடிப்படை முதலுதவிப் பயிற்சி வழங்கப்பட்டது. இம்முதலுதவிப் பயிற்சியை  இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை வழங்கியிருந்தது.  இதன்போது முதலுதவிப் பயிற்சியை ஆரம்பித்து வைத்து கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…..

முதலுதவியை நன்கு அறிந்து கொண்டவர்கள்தான் முதலுதவிப் பயிற்சியை பெற்றுக் கொள்ளவோ அல்லது தங்களுடையவர்களுக்கு அப்பயிற்சியைப் பெற்றுக் கொடுக்கவோ முயற்சிக்கின்றார்கள். 

மட்டக்களப்பு மாவட்டத்திலே இலங்கை செஞ்சிலுவைச் சங்கமும், சென்.ஜோன் அம்யியுலன்சும் முதலுதவிப் பயிற்சிகளை வழங்கி வருகின்றன. இந்த இரு நிறுவனங்களும் முதலுதவிப் பயிற்சி அளிப்பதில் பாண்டித்தியம் பெற்ற நிறுவனங்களாகும்.

முதலுதவி அறிவு நேற்றுவரை எமக்குத் தேவைப்பட வில்லை இன்றும் தேவைப்படவில்லை எனவே நாளையும் தேவைப்படாது என்ற எடுகோள் எம்மத்தியில் பொருந்தாது. 

தற்போது, பல்வேறு விதமான நோய்களும் திடீர் விபத்துக்களும் சமூகத்தினரிடையே அடிக்கடி நிகழ்ந்த வண்ணம் உள்ளன. அவ்வேளையில் பெரிய காயங்கள், என்பு முறிவுகள் மட்டுமல்லாது உயிரிழப்புக்களும் ஏற்பட்டு விடுகின்றன. ஆனால் முதலுதவி அறிவினூடாக இத்தகைய பாதிப்புக்களையும் இழப்புக்களையும் தவிர்த்துக் கொள்ளவோ அல்லது குறைத்துக் கொள்ளவோ முடியும். இதனை உணர்ந்து கொண்ட அக்ஸஸ் நிறுவனம் தனது உத்தியோகத்தர்களுக்கு முதலுதவிப் பயிற்சியை அளிக்க முன் வந்தமை பாராட்டத் தக்கது என்றார்

அக்ஸஸ் நிறுவனத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் எஸ். சுரேந்திரனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நீண்டகால பயிற்சி அனுபவமுடைய முதலுதவிப் பயிற்றுனர் எஸ்.கணேசலிங்கம் நடாத்தினார்.






SHARE

Author: verified_user

0 Comments: