கிழக்கு மாகாணத்தினை வதிவிடமாக கொண்டு தற்போது அரசசேவையில் ஆசிரியர்களாக ஏனைய மாகாணங்களில் சேவையாற்றிக் கொண்டிருக்கும் தமிழ் பேசும் ( தமிழ், முஸ்லிம்) ஆசிரியர்களுக்கான ஒன்றுகூடல் எதிர்வரும் 2016.12.11ம் திகதி
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள பிரத்தியேக கலைப்பிரிவு நிலையமான ஸ்ராண்டட் கல்வி நிலையத்தில் காலை 10.00மணிக்கு நடைபெறவுள்ளதாக ஒழுங்கமைப்புக்குழு இணைப்பாளர் எஸ்.கோபிநாத் குறிப்பிட்டார்.
பட்டதாரி ஆசிரியர்கள், தேசிய கல்வியற் கல்லூரி ஆசிரியர்கள், ஆசிரியர் கலாசாலை பயிற்சி அசிரியர்கள், உதவிய ஆசிரியர்கள், தேசிய உயர் கல்வி டிப்ளோமா ஆசியரியர்கள் உள்ளிட்ட ஆனைத்து வகையான ஆசிரியர்களும் இதில் கலந்து கொள்ளலாம்.
இதன்போது வெளிமாகாண ஆசிரியர்கள் சங்கம் ஒன்று அங்குராப்பணம் செய்யப்படவுள்ளதாகவும், வெளிமாகாணங்களில் சேவையாற்றும் ஆசிரியர்களை பதிவு செய்வதற்கான விண்ணப்ப படிவமும் அன்றைய தினம் வழங்கப்படவுள்ளதாகவும் இதற்கு கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த ஏனைய மாகாணங்களில் சேவையாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறும், மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 0772827611 என்ற தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ளமுடியும் எனவும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment