22 Dec 2016

'மாகாண சபை முறையானது பிச்சை வேண்டாம் நாயைப்பிடி 'எனும் அளவுக்கு நிலமை மாறியுள்ளது கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் உதுமாலெப்வை

SHARE
தற்போதைய அரசில் மாகாண சபை முறையானது பிச்சை வேண்டாம் நாயைப்பிடி எனும் அளவுக்கு நிலமை மாறியுள்ளது.  இதுவரை கிழக்கு மாகாண சபையில் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டங்களில் இம்முறை முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திலையே எமது மாகாண சபைக்கு நிதி ஒதுக்கிடுகள் குறைக்கப்பட்டுள்ளது. இதுவா நல்லாட்சியின் இலட்சணம் என கோள்வி எழுப்பினார் கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் உதுமாலெப்வை
கிழக்க மாகாண சபைக்காகன 2017 ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் நேற்று முதலமைச்சரினால் முன்வைக்கப்பட்டது இதன் போது சபையில் கருத்துத்  தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் 
இக் கிழக்கு மாகாண சபையிலே நான் தொடர்ச்சியாக இருந்து வருகின்றேன் முன்னர் அமைச்சராக இருந்தேன் தற்போது எதிர்கட்சி தலைவராக இருக்கின்றேன் ஆனால் நான் அக் காலங்கிளல் பல வரவு செலவுத் திட்டங்களைச் சந்தித்துள்ளேன். இதுவே மிகவும் குறைத்த ஒதுக்கீடுகளைக் கொண்ட வரவு செலவுத் திட்டமாகும்.

சென்ற அரசாங்கத்தில் இவ்வாறு நிதி ஒதுக்கீடுகள் குறைக்கப்படவில்லை ஆனால் தற்போது நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற இந்த அரசாங்கத்திலையே இவ்வாறு நடந்துள்ளது. தற்காலத்தில் மகாண சபைக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதில்  நல்லாட்சி அரசு கரிசினை கொண்டுள்ளதாக அறியக்கிடைக்கின்ற நிலையில,; இவ்வாறு நிதி ஒதுக்கீட்டினை மாகாண சபைக்ககு நேரடியாக வழங்குவதனை தடுத்துள்ளனர் இதுவா நல்லாட்சி? தற்போது மாகாண சபை முறையானது பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்ற அளவுக்கு மாறியுள்ளது.

இதுவரை எமது மாகாண சபையூடாக முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்களில் 93 திட்டடங்கள் இதுவரை ஆரம்பிக்கப்படமால் இருக்கின்றது.

மாகாண சபை ஊடாக எமது மக்கள் எதாவது பெறவேண்டுமாக இருந்தால் எமக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.  மாகாண சபைக்கு நிதிகளை கூடுதலாக வழங்குவதால்  அதனை பிழையான வழியில் வெளிநாடுகளுக்கு செல்வதற்காக செலவு செய்கின்றனர் என்ற குற்றச்சாட்டினை அண்மையில் நிதியமைச்சர் முன்வைத்துள்ளார். அவ்வாறு வெளிநாடு செல்வதற்காக எந்த நிதிகளும் எமது காலத்தில் பயன்படுத்தப்படவில்லை ஏன் இந்த குற்றச்சாட்டினை இந்த அரசு முன்வைக்கவேண்டும் இதற்காக நீங்கள் இந்த அரசுக்கு வழங்கப்போகும் பதில் என்ன?

எமது மாகாணத்தில் வாழுகின்ற மக்கள் யுத்தத்தினாலும்,அனர்த்தங்களினாலும் கூடதலாக பாதிக்கப்பட்ட மக்களாகும். எனவே இம்மக்களுக்கு மாகாண சபையூடாக பலதரப்பட்ட உதவிகளை மேற் கொள்ள வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. இதனை நாங்கள் நிறைவேற்றவேண்டும். இந் தருணத்தில் ஒதுக்கப்படும் நிதிகளை குறைத்துள்ளமை எந்த வகையில் நியாயம்? எனவே இந்த நல்லாட்சி அரசு குறித்த விடயங்களில் கவனம் செலுத்தி எமது மாகாண சபைக்கான அதிகாரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் இதன் போது தெரிவித்தார்
SHARE

Author: verified_user

0 Comments: