மட்டக்களப்பு நகரை இணைக்கும் சின்னப்பாலம் வீதியில் பயணித்த முச்சக்கரவண்டியொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வாவிக்குள் பாய்ந்ததால் அதில் பயணித்த சாரதி உட்பட
5 பேர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புதன்கிழமை பகல் (21.12.2016) மட்டக்களப்பு நகரிலிருந்து ஏறாவூர் நோக்கி முச்சக்கர வண்டியில் பயணித்த அதன் சாரதி, இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் ஆகியோரே படுகாயமடைந்த நிலையில் வீதியால் சென்றோர் மற்றும் மீனவர்களால் வாவியிலிருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவர்களில் சிறு குழந்தைகள் உட்பட வயோதிபப் பெண்ணும் நினைவிழந்த நிலையில் இருந்ததாக உதவிக்கு விரைந்து மீட்டெடுத்தோர் தெரிவித்தனர்.
சம்பவம் இடம்பெற்றவுடன் அவ்வீதியால் பயணித்த சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் உடனடியாக உயிர்காப்பு மீட்பில் இறங்கியதாக சம்பவத்தை நேரில் கண்டோர் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment