மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கிரான் பிரதேசத்தில் வைத்து மீன் ஏற்றும் குளிரூட்டி வாகனத்திற்குள் மறைத்து கொண்டுவரப்பட்ட ஒரு தொகை மரங்களை செவ்வாய்க்கிழமை (29.11.2016) பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மரங்கள் மீன் ஏற்றும் குளிரூட்டி வாகனத்திற்குள் கடத்தப்படுவதாக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து கிரான் சந்தியில் மறைந்திருந்த பொலிஸார் செவவ்hய்க்கிழமை அதிகாலை வேளையிலேயே இவற்றைக் கைப்பற்றியதாகத் தெரிவித்தனர்.
மரம் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் சுமார் 15 அடி நீளமான 15 பெரிய மரக்குற்றிகள் என்பவனற்றைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு அதனை ஏற்றிவந்த லொறிச் சாரதியையும் கைது செய்துள்ளனர்.
சாரிதியை புதன்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவுள்ளதாகப் பொலிஸார் கூறினர்.
0 Comments:
Post a Comment