மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்தனமடு ஆற்றுப் பகுதியிலிருந்து சட்ட விரோதமாக ஏற்றி வரப்பட்ட மணலுடன் உழவு இயந்திரத்தையும் கைப்பற்றியுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இப்பகுதிகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் மணல் அகழப்பட்டு கடத்தப்படுவதாக பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் மறைந்திருந்த பொழுது செவ்வாய்க்கிழமை காலையில் (29.11.2016) இந்த மணல் ஏற்றப்பட்ட உழவு இயந்திரம் சிக்கியுள்ளது.
மணல் ஏற்றி வந்த உழவு இயந்திர சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். அவரை புதன்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட மணல் உழவு இயந்திர இழுவைப் பெட்டியுடன் எறாவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம்பற்றி ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment